நள்ளிரவில் தூங்கிகொண்டிருக்கும் போது திடீரென்று முழிப்பு வருதா? இதற்கு என்ன காரணம் தெரியுமா?
Health tips
Sleep
Midnight
By Logeswari
தூக்கம் என்பது அனைவருக்கும் மிகவும் முக்கியமான ஒன்று. ஆனால் சிலருக்கு தூக்கமே வருவது இல்லை. அப்படி தூங்கினாலும் நள்ளிரவில் திடீரென முழித்து கொள்ளும் பழக்கம் உள்ளது.
அதன் பிறகு தூக்கமே வராமல் படுக்கையில் புரண்டு கொண்டிருப்பர். இந்த பிரச்சனையை பலரும் உணர்ந்திருப்போம். இதனால் அவர்களுக்கு நிம்மதியான உறக்கம் கிடைப்பதில்லை.
என்னவென்று கேட்டால் தூக்கம் வரவில்லை என்று கூறுவார்கள். சரி வாங்க.. இந்த பிரச்சனைக்கான காரணத்தை குறித்து பார்க்கலாம்.
- இரவில் அதிகமாக தண்ணீர் எடுத்து கொண்டால் அடிக்கடி சிறுநீர் கழிக்க எழுந்திருப்போம். இதனால் தூக்கம் பாதிக்கப்படலாம். அதுபோல நீரிழிவு நோயாளி, கர்ப்பிணி பெண்கள் சிறுநீர் கழிக்க அடிக்கடி எழுந்திருக்க கூடும்.
- ஆல்கஹால் அருந்திவிட்டுத் தூங்கினாலும் உடல் ஓய்வு நிலையில் இருக்காது. அவை உடலின் வளர்சி மாற்றத்தைத் தடுக்கும். இதனால் உடல் இயல்பு நிலைக்கு வரும் வரைப் போராடும். இதன் காரணமாகத் தூக்கம் தடைப்பட வாய்ப்புண்டு.
- தூங்கும் போது வறட்சியான தொண்டை, தலைப் பாரம் போன்ற காரணங்களாலும் திடீரென விழிப்பு வந்துவிடும். அதேபோல் பகலில் அதிகமாக தூங்கினாலும் இரவில் தூக்கம் வராது.
- குடும்பப் பிரச்னைகள், அலுவலகப் பிரச்னை, கடன் பிரச்னை, போன்ற காரணங்களால் மனம் ஒரு நிலையில் இருக்காது. அப்படியே தூங்கினாலும் திடீரென ஞாபகம் வந்து தூக்கத்தைக் கெடுத்துவிடும்.
-
கெட்ட கனவு, கொடூர கற்பனை கனவுகள் வந்தாலும் திடீரென எழுந்து விடுவோம். நாம் எதிர்பாராத விதத்தில் அந்தக் கனவு இருந்தால் அதன் சிந்தனையிலேயே தூக்கம் போய்விடும்.
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US