குக் வித் கோமாளி போட்டியாளர்களின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Cooku with Comali என்பது பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் நகைச்சுவை அடிப்படையிலான சமையல் போட்டி நிகழ்ச்சியாகும்.
இது ஸ்டார் விஜய் மற்றும் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பப்படுகிறது.
அங்கு போட்டியாளர்கள் ஒவ்வொரு வாரமும் சமையல்காரர்கள் மற்றும் நகைச்சுவையாளர்கள் என ஒன்று சேர்ந்து (கோமாளிகள்) ஜோடியாக பங்குப்பற்றுகின்றனர்.
முதல் சீசன் 16 நவம்பர் 2019 அன்று ஆரம்பமாகி 23 பிப்ரவரி 2020 அன்று முடிவடைந்தது.
4வது சீசன் 28 ஜனவரி 2023 அன்று ஆரம்பமாகி போட்டியாளர்களும் அவர்களது கோமாளிகளும் ஒவ்வொரு வாரமும் சவாலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் .
மற்றும் செஃப் தாமு மற்றும் செஃப் வெங்கடேஷ் பட் ஆகியோர் நடுவராக இருக்கின்றனர்.
குக் வித் கோமாளி போட்டியாளர்களாக...
குக் வித் கோமாளி நான்காவது சீசனில் குக்குகளாக ஸ்ருஷ்டி டாங்கே, ஷெரின், ராஜ் அய்யப்பா, ஷிவாங்கி, விஜே விஷால், காளையன், விசித்ரா, அண்ட்ரின் நெளரிகட், கிஷோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த சீசனின் கோமாளிகளாக மணிமேகலை, சுனிதா, ஜிபி முத்து, மௌனராகம் சீரியல் நடிகை ரவீனா, புகழ், குரேஷி, ஓட்டேரி சிவா, சில்மிஷம் சிவா, சிங்கப்பூர் தீபன், மோனிஷா பிளஸ்சி ஆகியோர்கள் பங்குப்பற்றினர்.
இதில் பாதி பேர் வெளியேறிய நிலையில் இந்நிகழ்ச்சியில் பங்குப்பற்றுவோரின் சம்பள விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளது.
அவர்களின் சம்பள விவரங்கள் வருமாறு..
நடிகை விசித்ராவுக்கு 20 முதல் 30 ஆயிரம் வரை சம்பளம் வழங்கப்படுகிறது
ஷிவாங்கிக்கு 15 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சம்பளம்
நடிகையான ஆன்ட்ரியாவுக்கு 25 ஆயிரம் முதல் 30 ஆயிரம் ரூபாய் வரை சம்பளமும்
விஜே விஷாலுக்கு 20 முதல் 25 ஆயிரம் ரூபாய் சம்பளமும்,
சிருஷ்டி டாங்கேவுக்கு 25 முதல் 35 ஆயிரம்,
ராஜ் அய்யப்பாவுக்கு 20 முதல் 26 ஆயிரம்,
மைம் கோபிக்கு 40 முதல் 50 ஆயிரமும்,
ஷெரினுக்கு 30 முதல் 35 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது எனவும் தகவல்கள் வந்துள்ளன.