டயட்டிங் செய்வதால் உடலில் இப்படிப்பட்ட சிக்கலை ஏற்படுத்துமா?
உடலை பொறுத்த வரை ஆரோக்கியம் என்பது மிகவும் முக்கியம். உடல் எடை அதிகம் இருப்பவர்கள் கச்சிதமான உடலை பெற உணவுக்கட்டுப்பாடு, உடற்பயிற்சி என பலவிதமான முயற்சிகளை மேற்கொள்வார்கள்.
ஆனால் உணவு கட்டுப்பாடு செய்யும்போது அதன் பக்கவிளைவாக அசிடிடி எனப்படும் அமிலத்தன்மை உடலில் ஏற்பட்டு பல்வேறு சிக்கல்களைத் தூண்டும்.இதனால் உடலுக்கு பல வித தீங்குகளை உண்டாக்கும்.
உடலின் ஆரோக்கியத்தை பொருத்தே ஹார்மோன்களும் சீராக செயல்படும். நீங்கள் அதிக உடல் எடை கொண்டவராக இருந்து உடல் எடையை குறைக்க வேண்டும் என முடிவு செய்தால் கட்டாயம் உங்கள் ஹார்மோன்களின் அளவை வேறுபடுத்தும்.
அது உடல் அளவில் மட்டுமில்லாமல் உளவியல் ரீதியாகவும் பிரச்சினைகளை தரும். பெண்கள் டயட்டிங் செய்வதால் மாதவிடாய் கோளாறுகள், இதய நோய்கள், கர்ப்பப்பை பிரச்சினை, மன அழுத்தம் போன்றவை ஏற்படும். இதனால் குறைந்த எடையும் அதிகமாக வாய்ப்புண்டு.
திடீர் மாற்றங்கள் மனிதரால் ஏற்று கொள்ள முடியாதது. உடலும் அது போல தான்.. நமது உடலில் வழக்கத்திற்கு மாறாக ஏதேனும் மாற்றங்கள் நடந்தால் அது முழு ஆரோக்கியத்தையும் பாதிக்கும். அந்த வகையில் முடி கொட்டுதல், வழுக்கை, அடர்த்தி குறைவு போன்றவை நேரலாம்.
உடல் எடையை குறைக்க பலவித மாற்றங்களையும் உங்கள் அன்றாட வாழ்வில் செய்திருப்பீர்கள். இதன் விளைவாக இரவில் உங்கள் தூக்கத்தை முற்றிலுமாக இது இழக்க செய்து விடும்.