அடிக்கடி வெந்நீர் குடிப்பதால் இந்த உடல் உறுப்புகள் பாதிக்கப்படுமா? கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்
Side effects
Health tips
Benefits
Hot water
By Logeswari
பெரும்பாலும் உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் வெந்நீர் குடிப்பது வழக்கம். இது உடம்பில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் எடையை குறைக்க உதவும்.
ஒரு பக்கம் உடலுக்கு நன்மை கொடுத்தாலும் மறுபக்கம் உடலுக்கு தீமையும் ஏற்படுத்துகிறது. நன்கு கொதிக்க வைத்த நீரில் இருந்து வெளியாகும் நீராவியை ஆழமாக சுவாசிப்பதால் மூக்கடைப்பில் இருந்து நிவாரணம் கொடுக்கும்.
சளி, தொண்டை வலியையும் போக்குகிறது. சரி வாங்க வெந்நீர் பருகுவதால் ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள் குறித்து பார்க்கலாம்.
நன்மைகள்:-
- சூடான நீர் செரிமான மண்டல செயல்பாடுகளுக்கு பயனுள்ளதாய் இருக்கும். சூடான நீராக இருந்தாலும் குளிர்ந்த நீராக இருந்தாலும் உடலுக்கு தேவையான நீர் அருந்துவது முக்கியம். இல்லையென்றால் மன நலம் மற்றும் மூளையின் செயல்பாடுகளில் பாதிப்பு ஏற்படைய வாய்ப்பு உள்ளது.
- எந்த வெப்பநிலை நீராக இருந்தாலும் அதனை பருகுவது நீர்ச்சத்தை தக்கவைக்க உதவும். பெண்கள் தினமும் 2.3 லிட்டர் நீரும், ஆண்கள் 3.3 லிட்டர் நீரும் பருக வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
- பாலூட்டும் தாய்மார்கள், கர்ப்பிணிகள் தண்ணீர் அதிகம் பருகுவது அவசியம். சூடான நீரை பருகி அந்த நாளை தொடங்குவது சிறப்பானது. கதகதப்பான நீருடன் கொஞ்சம் உடற்பயிற்சி செய்து வருவது சிறந்தது.
- மிதமான சுடுநீரில் குளிப்பது ரத்த ஓட்டம் துரிதமாக செயல்பட உதவும். இரவு நேரத்தில் வெந்நீரில் குளியல் போடுவது நிம்மதியான தூக்கத்திற்கு உதவும். அவ்வாறு குளிப்பதால் ரத்தத்தில் உள்ள கழிவுப்பொருட்களை வெளியேற்றி சிறுநீரகங்களையும் பாதுகாக்கும்.
தீமைகள்:-
- மிகவும் சூடாக இருக்கும் தண்ணீரை பருகுவது உணவுக்குழாயில் உள்ள திசுக்களை சேதப்படுத்தலாம். அதுமட்டும் இல்லாமல் சுவை திறனை சிதைக்கலாம், எனவே வெந்நீர் குடிக்கும் போது மிகவும் கவனமாக இருங்கள்.
-
130 டிகிரி பாரன்ஹீட் முதல் 160 டிகிரி பாரன்ஹீட் வரையிலான வெப்பநிலையில் வெந்நீரை அருந்துவது சிறந்தது. அதற்கு மேலான வெப்பநிலை அதிகரித்தால் சரும செல்கள் பாதிப்புக்குள்ளாகும்.
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US