உயிருக்கே ஆபத்தாகும் டெங்கு! இந்த அறிகுறிகள் இருந்தால் அலட்சியம் வேண்டாம்
பொதுாவாக டெங்கு என்பது கொசுக்களால் பரவும் ஒரு வைரஸ் நோயாகும்.
ஏடிஸ் இனத்தின் பெண் கொசுக்களால் இந்த டெங்கு வைரஸ் பரவுகிறது. மேலும் இந்த கொசுக்கள் தான் சிக்குன்குனியா, மஞ்சள் காய்ச்சல் மற்றும் ஜிகா வைரஸ் போன்ற பாதிப்புகளையும் ஏற்படுத்துகின்றதாக சொல்லப்படுகின்றது.
உலகெங்கிலும் ஆண்டுக்கு 6 கோடி பேர் இதனால் பாதிக்கப்படுகின்றனர்.
இது உயிர் ஆபத்துகளை விளைவிக்க கூடிய ஒரு கொடிய நோயாகும். இது உடலை மிகவும் வருத்தும் நோய் ஆகையால் என்பை முறிக்கும் காய்ச்சல் (breakbone fever) எனவும் அழைக்கப்படும்.
எனவே இவற்றை ஆரம்பத்திலே தடுப்பது நல்லது. அந்தவகையின் இதன் அறிகுறிகள் என்ன என்பதையும் எப்படி தடுக்கலாம் என்று பார்ப்போம்.
அறிகுறிகள் என்ன?
- தலைவலி,கண் பின்புற வலி
- பொதுவான உடல் வலி,தசை வலி
- மூட்டு வலி
- குமட்டலும் வாந்தியும் வயிற்றுக்கடுப்பு
- தோல் சினைப்பு, அடி முட்டிகளில் பொதுவாகவும்
- சிலருக்கு உடல் முழுதுமே அரிப்பு ஏற்படலாம்
- பசியின்மை
- தொண்டைப்புண்
- பல் ஈறுகளிலிருந்து குருதி வடிதல்
- மூக்கிலிருந்து குருதி வடிதல்
- மாதவிடாய் மிகைப்பு
- சிறுநீரில் குருதி போதல்
- நிணநீர்க்கணு வீக்கம் வெள்ளை அணுக்கள் எண்ணிக்கைக் குறைதல்
என்ன செய்யலாம்?
- முதலில் எந்தக் காய்ச்சலாக இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுகவேண்டும்.
- காய்ச்சலுடன் தலைவலி, வயிற்றுவலி, வாந்தி, உடல்சோர்வு, கருப்பு நிறத்தில் மலம் சிக்கல்போன்ற அறிகுறிகள் இருப்பின் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகுவது நல்லது.
- காய்ச்சல் இருக்கும் பொழுது உடலில் தேவையான தண்ணீர் சத்து இருக்க வேண்டும். ஜூஸ்கள் மற்றும் தண்ணீர் குடித்து உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
- காய்ச்சல் உள்ளவர்கள் தேவையான அளவு சிறுநீர் கழிவதை உறுதி செய்ய வேண்டும்.
எப்படி தடுக்கலாம்?
- வீட்டைச் சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- கொசுக்கடியிலிருந்து பாதுகாத்துக்கொள்ள கொசுவலைகளைப் பயன்படுத்த வேண்டும்.
-
மாலை நேரங்களில் முக்கியமாக 4 மணி முதல் 7 மணி வரை வீட்டின் ஜன்னல் மற்றும் கதவுகளை மூடி வைக்கவும் அல்லது ஸ்க்ரீனைப் பயன்படுத்தவும்.
- மாலை நேரங்களில் நொச்சித் தழை மூலம் மூட்டம் போட்டு அப்புகையை வீட்டில் பரப்பலாம்.