வயது வித்தியாசமின்றி பலரையும் தாக்கும் புற்றுநோய் வராமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்?
தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலரையும் புற்றுநோய் தாக்குகிறது.
மாறி வரும் உணவுப்பழக்கம் மற்றும் வாழ்க்கை முறை தான் புற்றுநோய் ஏற்படுவதற்கு காரணமாக உள்ளது.
புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பை குறைக்கும் சில முக்கிய விடயங்கள் குறித்து பார்ப்போம்.
புகையிலை
சிகரெட் புகைத்தல், புகையிலை பொருட்களை சாப்பிடுவது காரணமாக வாய், தொண்டை, குரல்வளை, நுரையீரல், கணையம், கர்ப்பப்பை, சிறுநீர்ப்பை, சிறுநீரகத்தில் புற்றுநோய் ஏற்படலாம்.
புகையிலை புகைப்பதால் மட்டுமல்ல, ஒருவர் புகைத்துவிட்ட சிகரெட் புகையை சுவாசிப்பதாலும் கூட நமக்கு புற்றுநோய் வரலாம். ஆகவே புகையிலை பக்கமே தலைவைத்து படுக்கக்கூடாது.
உடல் எடை
உடல் எடையை சரியாக பராமரிப்பது மார்பகம், ப்ராஸ்டேட், நுரையீரல், குடல், சிறுநீரக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கும்.
உணவில் கவனம்
தினமும் ஆரோக்கியமான, சரிவிகித உணவு எடுத்துக்கொள்வதன் மூலம் புற்றுநோய் பாதிப்பைக் குறைக்கலாம். அதிக அளவில் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்ட உணவுகளை தவிருங்கள்.
சுற்றுச்சூழல்
திடீரென்று அதீத வெப்பம் உள்ள பகுதிக்கு செல்வதும் கூட புற்றுநோயை ஏற்படுத்தலாம். கதிர்வீச்சு உள்ள பகுதி, ரசாயன ஆலைகள், நீண்ட நேரம் சூரிய ஒளியில் இருப்பது என பல காரணங்கள் உள்ளன.