சர்க்கரை நோயாளிகள் காலை உணவாக என்ன சாப்பிடலாம்?
ரத்த வழி உறவினர்களில் யாருக்காவது சர்க்கரை நோய் இருந்தாலும் நமக்கு சர்க்கரை நோய் வருவதற்கு வாய்ப்பு மிக அதிகமாக காணப்படுகிறது.
தலை முதல் கால் வரை அனை்தது உறுப்புகளையும் பாதிக்கக் கூடிய ஒரே நோய், சர்க்கரை நோய் தான்.
இவ்வாறு சக்கரை நோயால் பாதிக்கப்படவர்கள் என்ன சாப்பிடலாம் என்ன சாப்பிடக்கூடாது என்று பல விதிமுறைகள் காணப்படுகின்றன. ஆனாலும் வாயிற்கு ருசியான உணவை தான் கேட்க தோன்றும்.
இருப்பினும் காலையில் என்ன சாப்பிடலாம் என்று சந்தேகம் எழும்பும். ஏனென்றால் வீட்டில் அனைவரும் இட்லி தோசை என பல உணவுகளை உட்கொள்வார்கள். உங்களுக்கு அதை தவிர வேற ஏதாவது தருவார்கள். நீங்களும் ருசியான உணவை உட்கொள்ளலாம்.
அவை எவை என்று பார்க்கலாம்.
சாப்பிடக்கூடிய உணவுகள்
- இட்லி
-
மொறுமொறுப்பாக இல்லாமல் ஊத்தப்பம் போன்ற தோசை
-
கோதுமை உப்புமா
- சப்பாத்தி
- காய்கறி சாலட்
இதனுடன் பருப்பு அல்லது சாம்பார் அதிக அளவில் எடுத்துக்கொண்டு சட்னியைக் குறைவாகச் சாப்பிடலாம்.
தேங்காய் மற்றும் வேர்கடலைச் சட்னியை குறைத்து புதினா மற்றும் கொத்தமல்லிச் சட்னியை அதிகமாக சாப்பிடலாம்.
காலை உணவுடன் பருப்பு அதிகம் சேர்த்துக்கொள்வது நல்லது.
குறிப்பு : காலை உணவை 8மணி முதல் 9 மணிக்குள் சாப்பிட்டு முடித்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.