அழகை கெடுக்கும் முகப்பரு ஏற்படக் காரணங்கள் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம்?
முகப்பரு என்பது இன்றைய பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி பெரும் தொல்லை கொடுக்கும் பிரச்சினையாக உள்ளது.
இதனை போக்க பலர் அதனால் தான் கடைகளிலும் மார்க்கெட்களிலும் முகப்பருக்களை நீக்க என்று ஏராளமான க்ரீம்கள் பேஷ் வாஷ்கள் போன்றவற்றை பயன்படுத்தி வருகின்றார்கள்.
ஆனால் இந்த அழகு சாதனப் பொருட்கள் தற்காலிமாக முகப்பருக்களை போக்கினால் கூட கொஞ்ச நாள் கழித்து மீண்டும் முகப்பருக்கள் தொல்லை ஆரம்பித்து விடும்.
காரணம் முகப்பருவிற்கான அடிப்படை காரணத்தை யாரும் அறியாமல் இருப்பது தான். முகப்பரு வருவதற்கு ஹார்மோன் பிரச்சினையின்றி பல காரணங்கள் சொல்லப்படுகின்றது.
தற்போது முகப்பருக்கள் ஏற்பட காரணம் என்ன? இவற்றை தடுக்க என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.
[
முகப்பரு ஏற்படக் காரணங்கள்
- ஹார்மோன் மாற்றங்கள்
- தவறான உணவுப் பழக்கங்கள்
- பெண்களுக்கு ஏற்படும் கருப்பை சினைநீர்க் கட்டிகள் (பாலி சிஸ்டிக் ஓவரைன் சிண்ட்ரோம்)
- உடற்பருமன்
முகப்பருக்களை தடுக்க என்ன செய்யலாம்
- ஹார்மோன் மாற்றங்கள் உள்ளதா என்பதை பரிசோதனை செய்யுங்கள்.
- நல்ல உணவுப் பழக்க வழக்கங்களை பின்பற்றுங்கள்.
- உடல் எடையை நிர்வகிக்க உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
- ஜங்க் ஃபுட், கொழுப்பு நிறைந்த உணவுகளை தவிருங்கள்.
- பால் பொருட்களை தவிருங்கள். ஏனெனில் பாலில் உள்ள இன்சுலின் வளர்ச்சி பொருட்கள் உங்க முகப்பருக்களை மோசமாக்க வாய்ப்பு உள்ளது.
-
சர்க்கரை போன்ற உணவுப் பொருட்களை தவிர்த்து பழங்கள், காய்கறிகள் என எடுத்துக் கொள்ளுங்கள்.
- பருக்களுக்கு பப்பாளி பழம் சாப்பிடுவது சிறந்தது. இது உங்க சரும ஆரோக்கியத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
-
மன அழுத்தம் இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில் கார்டிசோல் போன்ற மன அழுத்தம் ஹார்மோன் கூட உங்களுக்கு முகப்பருக்கள் பிரச்சினையை உண்டாக்க வாய்ப்பு உள்ளது.
-
இரவில் நன்றாக தூங்குங்கள்