மாதவிடாய் நேரத்தில் தலைச்சுற்றல் ஏற்படுகிறதா? - இதோ அதற்கான காரணம்
பெண்களுக்கு மாதந்தோறும் மாதவிடாய் ஏற்படுவது ஒரு சாதாரண உடல் செயல்முறையாகும். ஒவ்வொரு பெண்ணும் ஒரு குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு இதைக் கடந்து செல்ல வேண்டும்.
இந்த நேரத்தில், பல வகையான பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். உதாரணமாக அதிக இரத்தப்போக்கு, வயிற்று வலி, மனநிலை மாற்றங்கள் என்பவை ஆகும்.
இது தவிர, சில பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அடிக்கடி தலைச்சுற்றல் ஏற்படுகிறது. படுக்கையில் இருந்து எழுந்திருக்கக்கூட முடியாத சிலர் இருக்கிறார்கள்.
இது ஏன் நடக்கிறது?, இதை எப்படி தடுப்பது என்பது குறித்து யோசித்துக் கொண்டு இருக்கின்றீர்களா...? இதோ உங்களுக்கான எளிய மருத்துவ குறிப்பு. கட்டாயம் செய்து பார்க்கவும்.
மாதவிடாய் காலத்தில் ஏன் தலைச்சுற்றல் ஏற்படுகிறது?
மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு இரத்தப்போக்கு ஏற்படுகின்றது. இதன் காரணமாக உடலில் இரத்த இழப்பு ஏற்படுகிறது. இது ஆக்ஸிஜன் விநியோகத்தைக் குறைக்கலாம்.
ஏற்கனவே இரத்த சோகையால் பாதிக்கப்பட்ட பெண்களை இந்தப் பிரச்சனை அதிகம் பாதிக்கிறது. இதன் காரணமாக, தலைச்சுற்றலும் ஏற்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
மாதவிடாய் காலங்களில், உடலில் ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்களின் அளவு மாறுகிறது. இது இரத்த அழுத்தத்தை பாதிக்கிறது மற்றும் தலைச்சுற்றல் ஏற்படுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.
சில பெண்கள் மாதவிடாய் காலத்தில் சாப்பிடுவதையும் குடிப்பதையும் நிறுத்துகிறார்கள். இது குறைந்த இரத்த அழுத்தம் (Low BP) பிரச்சனையை ஏற்படுத்துகிறது, இது உடலில் ஆக்ஸிஜன் மற்றும் இரத்த ஓட்டத்தை குறைக்கும்.
இரத்தப்போக்கு நீரிழப்பை ஏற்படுத்துகிறது. தண்ணீர் பற்றாக்குறையால் பலவீனம் மற்றும் தலைச்சுற்றல் கூட ஏற்படலாம்.
இதை தடுப்பது எப்படி?
இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ளுங்கள். மாதுளை, பீட்ரூட், ஆப்பிள், வெல்லம் போன்றவற்றை எடுத்துக்கொள்வது சிறந்த தேர்வாகும்.
போதுமான அளவு தண்ணீர் குடிக்கவும், மூலிகை தேநீர் அல்லது தேங்காய் தண்ணீரை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளவும்.
அதிகப்படியான காஃபின் உட்கொள்வதைத் தவிர்க்கவும், ஏனெனில் இது நீரிழப்பை ஏற்படுத்தி தலைச்சுற்றலுக்கு காரணமாக இருக்கலாம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |