உடலில் இரும்புசத்து அதிகம் இருந்தால் ஆபத்து! உடலில் ஏற்படும் மாற்றங்கள் இதோ
இரும்புச்சத்து நம் உடலுக்கு மிக முக்கியமான சத்து. இது முழு உடலுக்கும் ஆக்ஸிஜனை வழங்குகிறது.
இரும்புச்சத்து குறைபாடு காரணமாக, ஆக்ஸிஜன் விநியோகம் தடைபடுகிறது இதனால் சோர்வு மற்றும் பலவீனம் காணப்படுகிறது.
இரும்புசத்து குறைபாட்டால் உடலில் சிவப்பணுக்கள் உருவாகாமல், ரத்தம் கிடைக்காமல் பல நோய்களுக்கு ஆளாக நேரிடுகிறது.
ஆனால், உடலில் அதிகப்படியான இரும்புச்சத்து இருப்பதும் ஆபத்தானது.உடலில் இரும்புச்சத்து அதிகமாக இருந்தால் ஹீமோக்ரோமாடோசிஸ் என்று அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக நீங்கள் பல கடுமையான நோய்களால் பாதிக்கப்படலாம்.
இரும்புசத்து அதிகமாக இருந்தால் உடலில் நிகழும் மாற்றங்கள்
அதிகப்படியான இரும்புசத்து உடலில் இரும்பு நச்சுத்தன்மையைப் உண்டாக்கும் . இது இரைப்பை குடல் அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும்.இதனால் குமட்டல், வயிற்று வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்.
உடலில் அதிகப்படியான இரும்புச்சத்து கல்லீரல் மற்றும் மூளைக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.
அதிகப்படியான இரும்புச்சத்து இரத்த நாளங்களை சேதப்படுத்தும், இது இதய நோய் அபாயத்தை கணிசமாக அதிகரிக்கும். இதய செயலிழப்பு பிரச்சனை உருவாக்கும்.
அதிகப்படியான இரும்புசத்து கல்லீரல் ஈரல் அழற்சி பிரச்சனையை ஏற்படுத்தும். இதனால் கல்லீரல் பாதிக்கப்படலாம்.
நுரையீரலில் இரும்புச்சத்தின் குவிப்பு சுவாச பிரச்சனைகளை ஏற்படுத்தும், மூட்டுகளில் இரும்புச்சத்தின் குவிப்பு மூட்டு வலியை ஏற்படுத்துகிறது.
உடலில் அதிகப்படியான இரும்புச்சத்து சருமத்தின் நிறத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும். சரும நிறம் பழுப்பு நிறமாக தோன்றலாம்.
எனவே உடலில் இரும்புச்சத்து அதிகமாக இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், மருத்துவரை அணுக வேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |