கன்னத்தில் பரு வர என்ன காரணம்? இதனை எப்படி போக்கலாம்?
முகத்தில் முடி வளரும் இடத்தில் அழிந்த திசுக்களுடன் எண்ணெய்ப் பசையும் சேர்ந்து அடைபட்டுப் போவதால் பரு வருகிறது. முகம், கழுத்து, மார்பு, பின்புறம், தோள்பட்டை போன்ற இடங்களில் இது வரலாம்.
முகத்தில் கொழுப்பு அதிகமாக வெளியேறுதல், கிருமித் தொந்தரவு, ஹார்மோன்களின் ஏற்றத்தாழ்வு, ஒரு சில மருந்துகளால் பரு வரலாம். அதிகக் கொழுப்பு சேர்ந்த உணவு வகைகளைச் சாப்பிடுவதும் இதற்குக் காரணம்.
அதிலும் சிலர் முகத்திற்கு பொருந்தாத கண்ட கண்ட கிறீம்களை வாங்கிப்போடுவதும் தற்போது வழக்கமாகிவிட்டது. இதனால் பரு அதிகரிக்குமே தவிர குறையாது.
அதுமட்டுமின்றி சிலருக்கு கன்னத்தில் அதிகமாக பரு காணப்படுவதுண்டு.
அந்தவகையில் கன்னத்தில் பரு வர என்ன காரணம்? இதனை தடுக்க என்ன செய்யலாம் என இங்கு பார்ப்போம்.