மஞ்சள் பூஞ்சை நோய் பரவ காரணம் என்ன? யாரை எல்லாம் தாக்கும்?
இந்தியாவில் பரவி வரும் மற்றுமொரு நோயாக மஞ்சள் பூஞ்சை உள்ளது. இது கருப்பு பூஞ்சை மற்றும் வெள்ளை பூஞ்சை ஆகியவற்றை விட மஞ்சள் பூஞ்சை மிகவும் ஆபத்தை ஏற்படுத்தக் கூடியது என்கிறார்கள் மருத்துவத் துறையினர்.
உடலில் உள்ள முக்கிய உறுப்புக்களை செயலிழக்கச் செய்யும் அளவுக்கு மஞ்சள் பூஞ்சை ஆபத்தானது.
எனவே அறிகுறிகளை கவனித்தால் உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.
அந்தவகையில் தற்போது மஞ்சள் பூஞ்சை தொற்று யாரை எல்லாம் பாதிக்கும்? அறிகுறிகள் என்ன என்பதை பார்ப்போம்.
யாருக்கு ஏற்படும்?
மஞ்சள் பூஞ்சை நோய் பாம்பு, பல்லி உள்ளிட்ட ஊர்வனவற்றுக்கே ஏற்படும். சுகாதாரமாக இல்லாததும், சுகாதாரமற்ற உணவுகளை எடுத்துக்கொள்வதாலும், நோய் எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்களுக்கும் மஞ்சள் பூஞ்சை நோய் ஏற்படலாம்.
அறிகுறி என்ன?
இந்த நோய் தாக்கியவர்களுக்கு உடல் அசதி, பசியின்மை, திடீரென உடல் எடை குறைதல் ஆகிய அறிகுறிகள் ஏற்படும். உள்உறுப்புகள் பாதித்து மஞ்சள் நிற சீழ் வைத்து ஆறாத புண்களாக மாறி மரணம் கூட ஏற்படலாம்.
இதனை தடுக்க என்ன செய்யலாம்?
சிறந்த சுகாதாரம், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியே பூஞ்சை நோய்களுக்கு எதிரான கவசம் ஆகும். மஞ்சள் பூஞ்சை நோய் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆரம்ப நிலையிலேயே கண்டறியவும் சுகாதாரத்துறை முடுக்கிவிடப்பட்டு உள்ளது.