அக்டோபர் 1 பிரான்சில் வாழும் பிரித்தானியர்களுக்கு ஒரு முக்கியமான நாள்... நினைவிருக்கிறதா?
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து பிரான்சில் வாழும் பிரித்தானியர்கள் பல முக்கிய மாற்றங்களை எதிர்கொண்டுவருகிறார்கள். அவர்கள் சந்திக்கவிருக்கும் மற்றொரு முக்கிய மாற்றம் அக்டோபர் 1 அன்று நிகழ இருக்கிறது.
2021 அக்டோபர் 1 ஏன் முக்கியமான நாள்?
2020 டிசம்பர் 31ஆம் திகதிக்கு முன்பிருந்தே பிரான்சில் வாழும் முழு நேர வாழிட உரிமம் கொண்ட பிரித்தானியர்கள், 2021 அக்டோபர் 1 அன்று carte de séjour residency card ஒன்றை உரிமையாக்கிக்கொண்டிருக்கவேண்டும்.
குறிப்பிட்ட நேரத்தில் அந்த அட்டை வைத்திராதவர்களுக்கு என்ன நேரிடும்?
2021 அக்டோபர் 1ஆம் திகதி முதல், carte de séjour residency card இல்லாதவர்கள் சில முக்கியமான பணிகளை மேற்கொள்ள இயலாது.
என்னென்ன விடயங்களுக்கு carte de séjour residency card கேட்கப்படும்?
- பிரான்சில் நீங்கள் பணிபுரிவதற்கான சட்டப்பூர்வ உரிமை உள்ளதா என உங்கள் பணியாளர்கள் சரிபார்க்க இந்த அட்டை தேவை.
- நீங்கள் வாடகைக்கு வாழும் வீட்டின் உரிமையாளர் அதைக் கேட்கலாம்.
- நீங்கள் ஏதாவது அரசு உதவி பெறும் பட்சத்தில் CAF அலுவலகங்கள் அதைக் கேட்கலாம்.
- பிரான்சில் மருத்துவ உதவி பெற உங்களுக்கு உரிமை உள்ளதாக என்பதை அறிவதற்காக CPAM அலுவலகங்கள் அதைக் கேட்கலாம்.
- பொலிசார் வழியில் உங்களை நிறுத்தி அடையாள அட்டை கேட்கும்போது இந்த அட்டையைக் கேட்கலாம்.
- நீங்கள் இந்த carte de séjour residency cardஐ சமர்ப்பிக்க இயலாவிட்டால், அவசர மருத்துவ உதவி, பணி, வாடகைக்கு வீடு ஆகியவை மறுக்கப்படுவதுடன், நீங்கள் நாட்டை விட்டு வெளியேறும்படியும் கூறி உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம்.
- நீங்கள் ஏற்கனவே carte de séjour residency card கோரி விண்ணப்பித்திருந்தால், அதற்கான ஆதரத்தை பத்திரமாக வைத்திருப்பது அவசியம்.
- பிரான்ஸ் அல்லது ஏதேனும் ஒரு ஐரோப்பிய ஒன்றிய நாட்டின் இரட்டைக் குடியுரிமை வைத்திருப்பவர்கள் (உதாரணமாக அயர்லாந்து), மற்றும் குறிப்பிட்ட சில தூதரக பணி செய்வோர் உட்பட சிலருக்கு மட்டும் இந்த விதியிலிருந்து விலக்கு உள்ளது.
மேலதிக தகவல்களுக்கு...https://www.thelocal.fr/20210920/what-changes-for-brits-in-france-on-october-1st/