2025ஆம் ஆண்டில் பிரான்சில் நிகழவிருக்கும் சில முக்கிய மாற்றங்கள்
2024ஆம் ஆண்டு முடிவடைய உள்ள நிலையில், 2025ஆம் ஆண்டில் பிரான்சில் சில முக்கிய மாற்றங்கள் நிகழவிருக்கின்றன.
அவற்றில், மருத்துவம் தொடர்பில் நிகழவிருக்கும் சில மாற்றங்கள் குறித்து இங்கு காணலாம்.
Cold மற்றும் flu மருந்துகள்
2025ஆம் ஆண்டின் துவக்கத்திலிருந்து, ஜலதோஷம் மற்றும் ப்ளூ காய்ச்சலுக்கான மருந்துகளான Actifed, Dolirhume, Rhinadvil அல்லது Humex போன்ற மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச்சீட்டு இல்லாமல் வாங்கமுடியாது.
மன நலனுக்கு முக்கியத்துவம்
2025இலிருந்து, பிரான்ஸ் சுகாதார அமைச்சகம், மன நலனுக்கு முக்கியத்துவம் கொடுக்க உள்ளது.
மருத்துவக் காப்பீடு
2025இல், mutuelles என்னும் மருத்துவக் காப்பீடு சுமார் 10.35 சதவிகிதம் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மருத்துவர் கட்டணம் அதிகரிப்பு
இம்மாதம், அதாவது டிசம்பர் 22ஆம் திகதி முதலே மருத்துவரை கலந்தாலோசிக்கும் consultations fee 26.50 யூரோக்களிலிருந்து 30 யூரோக்களாக அதிகரிக்க உள்ளது.
குழந்தைகளுக்கான மருத்துவப் பரிசோதனை
பிரான்சில், குழந்தைகளுக்கு 20 மருத்துவப்பரிசோதனைகள் கட்டாயம் ஆகும். அவற்றில் பெரும்பாலானவை குழந்தை பிறந்த அடுத்த சில வராங்களிலேயே மேற்கொள்ளப்படும்.
2025இலிருந்து 6 முதல் 7 வயதுடைய பிள்ளைகளுக்கும் ஒரு மருத்துவப்பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
இந்த பிள்ளைகளுக்கு, வழக்கமான சோதனைகளுடன் கூடுதலாக மன அழுத்தம் போன்ற விடயங்களுக்காக பரிசோதனைகளையும் மருத்துவர்கள் மேற்கொள்ள இருக்கிறார்கள்.
ஒரு முக்கியமான விடயம் என்னவென்றால், பிரான்ஸ் பிரதமர் மிஷெல் பார்னியேர் ஆட்சி கவிழ்க்கப்பட்டுவிட்டதால், பட்ஜெட்டில் மருத்துவம் தொடர்பாக முன்வைக்கப்பட்டிருந்த திட்டங்களும் நின்றுபோயின.
ஆக, அடுத்த பிரதமரின் தேர்வுக்குப் பின் 2025ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் இந்த புதிய மாற்றங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |