ஜூன் மாதத்தில் பிரான்சில் நிகழவிருக்கும் மாற்றங்கள்
ஜூன் மாதத்தில் பிரான்சில் பல மாற்றங்கள் நிகழ இருக்கின்றன. அவற்றில் சிலவற்றை இங்கு காணலாம். கொரோனாவைக் கட்டுப்படுத்துவதற்காக பல வாரங்கள் கட்டுப்பாடுகள் பல விதிக்கப்பட்டிருந்த நிலையில், பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் நான்கு கட்ட கட்டுப்பாடுகள் நெகிழ்த்தல் திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார்.
அதன் மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட நெகிழ்த்துதல்கள் இந்த மாதத்தில் நிகழ உள்ளன, ஆனால், நாட்டில் கொரோனா பரவல் நிலைமையைப் பொருத்து... ஜூன் மாதம் 9ஆம் திகதி முதல் மூன்றாம் கட்ட நெகிழ்த்துதல் ஜூன் மாதம் 9ஆம் திகதி முதல் மதுபான விடுதிகள், உணவகங்கள், காபி ஷாப்கள் திறக்கப்படவும், கட்டிடங்களுக்குள்ளும் வாடிக்கையாளர்களை அமர்த்தவும் அனுமதியளிக்கப்படுகிறது.
ஊரடங்கு, இரவு 11 மணிக்கு தள்ளிவைக்கப்படுகிறது, மக்கள் அலுவலகங்களுக்குச் சென்று பணி புரியலாம். ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் நான்காம் கட்ட நெகிழ்த்துதல் ஜூன் மாதம் 30ஆம் திகதி முதல் அமுலுக்கு வர இருக்கும் இறுதி கட்ட கட்டுப்பாடுகள் நெகிழ்த்துதலின்படி, கட்டிடங்களுக்கு உள்ளேயும் திறந்த வெளியிலும் நடக்கும் நிகழ்ச்சிகளில் 1,000 பேர் வரை அனுமதிக்கப்பட உள்ளார்கள்.
உணவகங்களில் எத்தனை பேருக்கு வேண்டுமானாலும் அனுமதி, ஊரடங்கும் முடிவுக்கு வர உள்ளது. ஜூன் 9 முதல் பிரான்சில் சுகாதார பாஸ்போர்ட் அமுலுக்கு வர உள்ளது. ஆனால், அது ஜூலை 1 வரை சர்வதேச அளவில் பயன்பாட்டுக்கு வரப்போவதில்லை.
ஜூன் 9 முதல் அமெரிக்கா உட்பட ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளிலிருந்து பயணிகள்
பிரான்சுக்கு வர அனுமதியளிக்கப்பட உள்ளது.
மறு பக்கம், ஜூன் 1 முதல் எரிவாயு விலை உயர்வு, ஜூன் 30 முதல் கோடை வியாபாரம்
துவக்கம், ஜூன் 21 முதல் வருடாந்திர இசை விழா ஜூன் 1 முதல் கூகுள் போட்டோ ஆப்
இலவசம் இல்லை போன்ற மாற்றங்களும் அமுலுக்கு வருகின்றன.