திருமணத்துக்கு முந்தைய இரவு சார்லஸ் டயானாவிடம் கூறிய அந்த விடயம்: ஜோதிடர் வெளியிட்டுள்ள ரகசியம்
உலகில் லட்சக்கணக்கானோர் கண்டு ரசித்த திருமணம், சார்லஸ் டயானா திருமணம். திருமணத்தின்போது, டயானா பதற்றமாகத் தெரிந்ததை கவனித்தவர்கள் பலர். வெறும் 20 வயதில், இத்தனை பேர் முன்னிலையில் வருங்கால மன்னரைத் திருமணம் செய்ததால் அவர் பதற்றமாகக் காணப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால், உண்மை அதுவல்ல என்கிறார் ஜோதிடரும் டயானாவின் தோழியுமான பென்னி (Penny Thornton) என்பவர்!
திருமணத்துக்கு முந்தைய இரவு சார்லஸ் டயானாவிடம் கூறிய விடயம்
விடயம் என்னவென்றால், தங்கள் திருமணத்துக்கு முந்தைய இரவு, இளவரசர் சார்லஸ் தன் வருங்கால மனைவியான டயானாவிடம், நான் உன்னைக் காதலிக்கவில்லை என்று கூறினாராம். தன்னிடம் டயானா கூறிய அதிர்ச்சியளிக்கும் விடயங்களில் இதுவும் ஒன்று என்று தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டியளித்த பென்னி கூறியுள்ளார்.
Image: WireImage
தான் டயானாவை காதலிப்பதாக அவர் தவறாக எண்ணி தன்னை திருமணம் செய்துவிடக்கூடாது என சார்லஸ் கருதியதாகவும், அதை அவர் டயானாவிடம் வெளிப்படையாகக் கூறிவிட முடிவு செய்ததாகவும், ஆனால், அது டயானாவுக்கு அதிர்ச்சியையும் துயரத்தையும் ஏற்படுத்தக்கூடியதாக இருந்ததாகவும் கூறியுள்ளார் பென்னி. அதனால், மறுநாள் தான் திருமணத்துக்கு போகக்கூடாது என்று டயானா எண்ணியதாகவும் தெரிவித்துள்ளார் பென்னி.
ஆனால்
ஆனால், இருவரது விருப்பத்துக்கும் மாறாக மறுநாள் அந்த திருமணம் நடந்தேவிட்டது. அந்த திருமணமே தவறானது என சார்லஸ் எண்ணியதாகவும், ஆனால், கடைசி நேரத்தில் திருமணத்தை நிறுத்தமுடியாது என்பதாலும், திருமணம் முடிந்தால் நிலைமை மாறலாம் என்று எண்ணியும் சார்லஸ் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்ததாகவும் கூறுகிறார் பென்னி.
Image: Getty Images
அதேபோல, டயானாவுக்கும் இந்த திருமணம் குறித்து சந்தேகம் இருந்ததாகவும், அது குறித்து அவர் தனது சகோதரிகளிடம் பேசியதாகவும், ’என்னால் சார்லசைத் திருமணம் செய்யமுடியாது’ என்றே அவர் கூறியதாகவும், ஆனால், ஏற்கனவே சார்லஸ் டயானா திருமணம் குறித்த செய்தி முழுவதும் பரவிவிட்டதால் இனி ஒன்றும் செய்யமுடியாது என்று அவர்கள் கூறிவிட்டதாகவும், Andrew Morton என்பவர் தனது Diana: Her True Storyஎன்னும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |