கலப்பின பெண்ணான மேகனுக்கு பிறக்கும் குழந்தையின் நிறம் எப்படி இருக்கும்? கேள்வி எழுப்பிய பிரித்தானிய ராஜ குடும்ப உறுப்பினர் இவர்தான்
பிரித்தானியாவை உலுக்கிய ஓபரா பேட்டியின்போது, பிரித்தானிய இளவரசர் ஹரியின் மனைவி மேகன், தனக்கு குழந்தை பிறப்பதற்கு முன்பே தன் குழந்தையின் நிறம் குறித்து ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியதாக பகீர் குற்றம் சாட்டியிருந்தார்.
அந்த பேட்டியில் அவர் கூறிய பல விடயங்களில் உண்மையில்லை என்பது தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வரும் நிலையில், அவரது குழந்தையின் நிறம் குறித்து கேள்வி எழுப்பியது இளவரசி ஆன்தான் என பிரபலம் ஒருவர் தற்போது தெரிவித்துள்ளதால் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேகன், தன் மகன் ஆர்ச்சியின் தோலின் நிறம் எவ்வளவு அடர் நிறத்தில் இருக்கும் என்பது குறித்து, அவன் தன் வயிற்றிலிருக்கும்போதே ராஜ குடும்ப உறுப்பினர் ஒருவர் கேள்வி எழுப்பியதாகவும், ஆனால், அது பிரித்தானிய மகாராணியாரோ அல்லது அவரது கணவர் இளவரசர் பிலிப்போ அல்ல என்றும் கூற, அது யாராக இருக்கும் என மக்கள் கணிக்கத் தொடங்கினார்கள்.
இளவரசர் வில்லியமிடம் நேரடியாகவே, பிரித்தானிய ராஜ குடும்பத்தினர் இனவெறியர்களா என கேள்வியே எழுப்பினர் ஊடகவியலாளர்கள்.
இந்நிலையில், ராஜ குடும்பத்தினரின் வாழ்க்கை வரலாற்றை புத்தகமான எழுதும், தொலைக்காட்சி மற்றும் வானொலி பிரபலமான Lady Colin Campbell (71) என்னும் பெண், இளவரசர் ஆர்ச்சியின் தோலின் நிறம் குறித்து கேள்வி எழுப்பியது இளவரசி ஆன்தான் என வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார்.
ஆனால், ஹரி மேகன் தம்பதி, இளவரசி ஆன் மீது தவறாக குற்றம் சாட்டுவதாக தெரிவித்துள்ள Lady Colin, பிரச்சினை, நிறம் அல்ல, அது பிரித்தானியர்களுக்கும் அமெரிக்கர்களுக்கும் இடையில் உள்ள கலாச்சார வேறு பாடு என்கிறார்.
மேகனுடைய நிறத்தைக் குறித்து எந்த குற்றச்சாட்டும் எழவில்லையே என்று கூறும் Lady Colin, இப்படி ஒரு திருமணம் நடந்தால், அவர்களுக்கு குழந்தைகள் பிறந்தால் பிறகு பெரும் பிரச்சினைகள் ஏற்படும் என இளவரசி ஆன் கவலைப்பட்டார்.
அதற்கும் காரணம் மேகனின் நிறம் அல்ல, கலாச்சார வேறுபாடுகளை ஏற்றுக்கொள்ள இயலாத அவரது இயலாமைதான் என்கிறார் அவர்.
ஒரு எளிமையான, அன்பும் அனுபவமும் மிக்க, அறிவுத்திறமையுள்ள ஒரு உறவினரின் அக்கறையை, ஹரியும் மேகனும் இப்படி தவறாக பயன்படுத்திக்கொண்டார்கள் என்கிறார் Lady Colin. யார் மீதுமே இனவெறுப்புக் குற்றம் சாட்ட முடியாது என்று கூறும் Lady Colin, ஆனால், இளவரசி ஆன் தெளிவாக, ஹரியிடம், அந்த பெண்ணை திருமணம் செய்யாதே, அவள் பொருத்தமானவள் அல்ல, அவள் நம் நாட்டுக்கே ஏற்றவள் அல்ல, ராஜ குடும்ப பொறுப்புகளுக்கும் பொருத்தமானவள் அல்ல என்று தைரியமாக கூறினார்.
பாருங்கள், அவர் சொன்னது உண்மையாகிவிட்டது அல்லவா என்கிறார் Lady Colin.
இளவரசி ஆன், பிரித்தானிய மகாராணியாரின் மகள், இளவரசர் சார்லஸின் தங்கை, இளவரசர் ஹரியின் அத்தை என்பது குறிப்பிடத்தக்கது.


