சித்தார்த்துக்கும் காவிரிக்கும் என்ன சம்பந்தம்.. KGF -யை தடுக்க எவ்வளவு நேரம் ஆகும்? சீமான் ஆவேசம்
கர்நாடகா மாநிலத்திற்கு 'சித்தா' படத்தின் புரொமோஷனுக்காக சென்ற நடிகர் சித்தார்த்தை அவமதித்த விவகாரத்திற்கு, நாம் தமிழர் கட்சி சீமான் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த்
நடிகர் சித்தார்த் தயாரித்து நடித்திருக்கும் படம் ‘சித்தா’. கர்நாடகா மாநிலத்தில் நடைபெற்ற இந்த படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் சித்தார்த் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, காவிரி பிரச்சனையால் அங்குள்ள கன்னட அமைப்பினர் தகராறு செய்ததால் அவர் நிகழ்வில் இருந்து வெளியேறினார். இந்த சம்பவத்திற்கு, நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகர் சிவராஜ் குமார் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சீமான் ஆவேசம்
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த சீமான், "காவிரி விவகாரம் தொடர்பாக அரசியல் தலைவர்களிடம் பேசி தீர்வு காண வேண்டும். இதை ஒரு கலைஞனிடம் கேட்பது எந்தவகையில் நியாயம்.
கன்னட நடிகர் யாஷ் நடித்த கே.ஜி.எஃப் திரைப்படம் இரண்டு பகுதி வெளிவந்தது. அதற்கு தமிழகத்தில் வரவேற்பு தான் வழங்கினோம். அதை தடுத்த நிறுத்த எவ்வளவு நேரம் ஆகும்.
நடிகர் சித்தார்த்துக்கு, காவிரி தண்ணீர் பிரச்சினைக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. அந்த அரங்கத்திற்குள் காவலர்கள் இருந்தும், பிரச்சனை எழுப்பியவர்களிடம் அவர்கள் கேள்வி எழுப்பவில்லை.
Actor #Siddharth was forced to leave a press conference he was attending of #Tamil movie "#Chiththa" on #September 28, due to angry #protestors over the #Cauverywater dispute. pic.twitter.com/qviXRWcgLM
— Madhuri Adnal (@madhuriadnal) September 28, 2023
இதுவே தமிழ்நாட்டில் நடந்திருந்தால் அவர்களை கைது செய்திருப்போம். இந்த அடிப்படை பண்பு கூட அந்த மாநிலத்தில் இல்லாமல் இருப்பது கண்டிக்கத்தக்கது" என்று பேசினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |