இளவரசர் ஹரி மேகன் தம்பதியர் குறித்து அமெரிக்கர்கள் என்ன நினைக்கிறார்கள்?: உண்மையை போட்டு உடைத்த ஊடகவியலாளர்
அமெரிக்கர்களிடையே இளவரசர் ஹரி மேகன் தம்பதியர் மீதான வெறுப்பு அதிகரித்துவருவதாக அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆர்வம் குறைந்துள்ளது
அமெரிக்க ஊடகவியலாளரான Megyn Kelly என்பவர் சமீபத்தில் வானொலி நிகழ்ச்சி ஒன்றில் ஹரி மேகன் தம்பதியர் குறித்து அமெரிக்கர்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை பகிர்ந்துகொண்டார்.
Megyn Kelly Attacks Prince Harry & Meghan Markle Over Couple's Invitation To King's Coronation: 'These Pathetic Money-Grubbing Spotlight Addicts'.https://t.co/tSTvoy05Dv
— Luss_DeJesus (@luss_dejesus) March 8, 2023
ஹரி மேகன் தம்பதியர் மீதான ஆர்வம் மக்களுக்குக் குறைந்துவருவதாக தெரிவித்துள்ள Megyn Kelly, ஹரியும் மேகனும் நாட்டையும், நாகரீகமான மனிதர்களையும் அவமதிப்பதாகவும், அதன் மூலம் பணம் சம்பாதிக்க முயல்வதாகவும் மக்கள் கருதுவதாக தெரிவித்துள்ளார்.
உண்மையில் இப்போது ஹரி மேகன் மீது வெறுப்பு உருவாகியுள்ளது என்று கூறும் Kelly, தங்கள் நெட்ப்ளிக்ஸ் தொடர் மற்றும் ஸ்பேர் புத்தகம் வெளியாகும் வரை இருந்த நிலைக்கும் இப்போதைக்கும் வித்தியாசம் உள்ளது.
Chris Rock Slams Meghan Markle While She Monetizes Her Life, with Emily ... https://t.co/z6MzFrhHxy via @YouTube What a RIOT! Take a few pounds off! Your laugh for the day!
— Kathy LeRoy (@kathyleroy) March 9, 2023
இப்போது அவர்கள் கீழே போய்விட்டார்கள், இப்போதைக்கு அவர்கள்தான் பிரபலமற்ற ராஜ குடும்ப உறுப்பினர்கள். அந்த விடயத்தில் இளவரசர் ஆண்ட்ரூவை விட அவர்கள் மோசமான நிலைக்குச் சென்றுவிட்டார்கள் என்கிறார்.