அரணை உயிரினத்தை பற்றி உங்களுக்கு தெரிந்தது என்ன?
அரணை (skink) என்பது சின்சிடே (Scincidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பல்லி இன ஓந்திகளாகும். இவை வறண்ட இடங்களில் வசிக்கக் கூடிய உயிரினமாகும்.
வெப்பமான வேளைகளில் மட்டுமே இவை வெளியில் இயங்குகின்றன. இரவு வேளைகளில் கற்களுக்கு அடியிலோ, பொந்துகளிலோ நுழைந்து கொள்ளும். நீண்ட குளிர்காலங்களில் பொந்துகளில் நுழைந்து கொண்டு நுழைவுப் பகுதியை பாசியால் அடைத்துவிட்டு ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கத் தொடங்கிவிடும்.எதை பற்றியும் கவலையில்லாத உறக்கத்தில் ஆழ்ந்துவிடும்.
அடுத்து பூமியில் வெப்பம் பட்டு, நிலம் சூடாகி, அந்த புழுக்கம் உள்ளே தாக்கும் வரை தூக்கம்.மட்டும்தான்!
கோடை காலத்தில் அரணை அடிக்கடி தோல் உரித்துக் கொள்ளும்.
அரணை தன் எதிரிகளிடமிருந்து தன்னைப் பாதுகாக்க உரிய நேரத்தில் தனது வாலினை ஒடித்துவிட்டு தப்பிடிடுமாம்.
முறிந்துபோன வால் சில நாட்களில் வளர்ந்துவிடும். நமக்கு நகம் போல, அரணைக்கு வால் வெட்ட வெட்ட வளர்ந்துவிடும்.