பிரதமர் மோடி வருடத்தில் 300 நாட்களும் இந்த உணவை தான் சாப்பிடுகிறார்.., என்ன தெரியுமா?
பிரதமர் நரேந்திர மோடி, வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்களுக்கு சிறப்புவாய்ந்த மக்கானாவை சாப்பிடுவாராம்.
பலரும் மக்கானாவை உணவில் சேர்த்துக் கொள்வது சமீப காலமாக அதிகரித்து வருகிறது.
மக்கானா என கூறப்படும் தாமரை விதையை பற்றி பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.
வருடத்தில் 300 நாட்கள் மக்கானா தனது உணவில் நிச்சயமாக இருக்கும் என்று மோடி கூறியிருக்கிறார்.
மேலும், அவற்றை பெரிய அளவில் பயிரிட வேண்டும் என்று வலியுறுத்திய மோடி, இது விவசாயிகளுக்கு லாபகரமானதாக இருக்கும் என்றும் கூறினார்.
இப்போது பல நகரங்களில் மக்கானா தினசரி காலை உணவாக மாறிவிட்டது என்று கூறிய அவர், இந்த ஆண்டு பட்ஜெட்டில் மக்கானா வாரியம் அமைப்பது பற்றி குறிப்பிடப்பட்டதையும் நினைவுப்படுத்தினார்.
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் மக்கானாவில் 90 சதவீதம் பீகாரில் இருந்து வருகிறது. இது முக்கியமாக தர்பங்கா, மதுபானி மற்றும் பூர்னியாவில் பயிரிடப்படுகிறது.
மேலும், மக்கானா, அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
இதன் நன்மைகள்
மக்கானா குறைவான கலோரிகளையே கொண்டுள்ளது. மேலும், இது புரோட்டீன் மற்றும் நார்ச்சத்தைக் கொண்டுள்ளது. மேலும் பசியைக் கட்டுப்படுத்த உதவுவதால், உடல் எடையைக் குறைக்கவும் உதவுகிறது.
மக்கானாவில் உள்ள நார்ச்சத்து, மலச்சிக்கலை போக்க உதவுகிறது.
மேலும், இதில் சோடியம் குறைவாக உள்ளது, பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நிறைந்துள்ளன. எனவே, இதை சாப்பிடுவதால் இரத்த அழுத்தத்தைக் கட்டுக்குள் வைக்க முடியும்.
மக்கானாவில் ஆக்ஸிஜனேற்றிகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளன. இவை பல்வேறு உடல்நலப் பிரச்சினைகளைத் தடுக்கின்றன.
இதில் உள்ள கால்சியம் மற்றும் மெக்னீசியம் ஆகியவை எலும்புகள் மற்றும் பற்களை வலிமையாக்குகிறது. மேலும், இரும்புச்சத்து இரத்த சோகையைத் தடுக்கிறது.
மக்கானாவை சாப்பிடுவதை வழக்கமாக வைகொண்டால் சருமம் நன்கு மின்னும்.மேலும், முகப்பரு மற்றும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவதைத் தடுக்கும்.
மக்கானா உடலில் இருந்து நச்சுக்களை வெளியேற்றுவதால் சிறுநீரகங்களை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |