அமாவாசையன்று வானில் நிகழும் அதிசயம் பற்றி தெரியுமா?
பொதுவாகவே அமாவாசை தினத்தில் பித்ரு தோஷம் நீங்க பல வழிப்பாடுகளை செய்வார்கள். இவ்வாறு செய்வதனால் குடும்பத்தில் உள்ள சிக்கல்கள் நீங்கும் என்று கூறப்படுகின்றது.
தை அமாவாசை, ஆடி அமாவாசை, புரட்டாசி மகாளய அமாவாசை ஆகியவை மிக முக்கியமானவையாக கருதப்படுகிறது.
அந்தவகையில் அமாவாசை தினத்தன்று வானில் ஒரு அதிசயம் நிகழுமாம். அது என்னவென்று இந்த பதிவில் முழுவதுமாக தெரிந்துக்கொள்வோம்.
வானில் நிகழும் அதிசயம் என்ன?
பொதுவாகவே நாம் வானத்தை நோக்கி எறியும் பொருட்கள் கீழ் நோக்கி தான் வந்தடையும். இதற்கு காரணமாக இருப்பது புவிஈர்ப்பு விசை. ஆன்மிகத்தில் இந்த நிகழ்வை ஆகர்ஷண சக்தி என அழைப்பர். ஆனால் ஒரு சில பொருட்களை வான்நோக்கி எறிந்தால் அது மீண்டும் கீழ் நோக்கி வருவதில்லை. அது புவி ஈர்ப்பு விசையையும் மீறி மேலே இருக்கும் சோமாதித்ய மண்டலத்திற்கு சென்று விடுகிறது. இந்த அதிசயமானது அமாவாவையன்று தான் நிகழுமாம்.
கீழே வராமல் இருக்கும் பொருள் என்ன?
அமாவாசை நாட்களில் கடல் அலைகள் மேல் நோக்கி எழும். சூரியனும் சந்திரனும் ஈர்ப்பு விசையை மேல் நோக்கி இழுப்பதால் கடல் நீர்மட்டம் உயரும். ஆகவே அலைகளும் மேலெழும்.
ஆகவே அன்றைய நாளில் எள்ளும், நீரும் இறைத்து முன்னோருக்கு உணவாக அளிக்கின்றனர். இது மேல் நோக்கி செல்வதாக நம்பப்படுகிறது. அவ்வாறு அது செல்லும் இடமானது பிதுர்லோகம் அல்லது சோமாதித்ய மண்டலம் என அழைக்கப்படுகின்றது.
கடல் அலைகள் மேல் நோக்கி எழுகின்றதோ, அந்த முறையில் தான் புவிஈர்ப்பு விசையையும் மீறி படைக்கும் உணவானது முன்னோரை சென்று அடைவதாக நம்பிக்கொண்டு இருக்கின்றார்கள்.
பிதுர்லோகம் என்றால் என்ன?
சோமன் என்றால் சந்திரன் மற்றும் ஆதித்யன் என்றால் சூரியன் இவை இரண்டும் இணையும் லோகமானது பிதுர்லோகம் என்று கூறப்படுகின்றது.
மேலும் அமாவாசையன்று கடல் மேல் நோக்கி எழுவதால் கடற்கரைகளில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறந்த ஒன்றாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |