கை நடுக்கம், குரலில் தடுமாற்றம்.., நடிகர் விஷாலுக்கு என்ன ஆச்சு? அதிர்ச்சி வீடியோ
விஷால் நடிக்கும் "மதகஜராஜா" திரைப்படத்தின் ரிலீஸை முன்னிட்டு நடந்த ப்ரீ ரிலீஸ் விழாவில் கலந்துகொண்டார்.
அதில் அவர் கை நடுக்கத்துடன், தடுமாற்றத்துடன் பேசும் வீடியோ வைரலாகி வருகிறது. அவருக்கு என்ன ஆச்சு என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படம் கடந்த 2013ஆம் ஆண்டே எடுத்து முடிக்கப்பட்டு தற்போது தான் ரிலீஸ் ஆக உள்ளது.
இப்போது வரும், அப்போது வரும் என எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாவதில் பல சிக்கல்கள் இருந்தன.
இந்நிலையில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப்படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வரும் ஜனவரி 12ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து விஷால், சுந்தர்.சி, விஜய் ஆண்டனி ஆகியோர் படத்தின் புரோமோஷன் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னையில் நேற்று நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில், மூவரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது விழாவில் கலந்துகொண்ட நடிகர் விஷால் மேடையில் படம் குறித்து பேசினார்.
What happened to Vishal🙁
— AmuthaBharathi (@CinemaWithAB) January 5, 2025
His hand was so shaking & can't even able hold Mic !!#MadhaGajaRaja pic.twitter.com/UiXez0b5lZ
வழக்கத்துக்கு மாறாக, உடலில் ஒருவித நடுக்கத்துடனும், பேச்சில் தடுமாற்றத்துடனும் விஷால் பேசினார்.
அதில், “இந்த வருடம் சிறந்த நடிகர் விருது கிடைக்குமோ இல்லையோ என்று தெரியாது. ஆனால், சிறந்த பாடகர் விருது கிடைக்கும்” என்று விஷால் பேசினார்.
அப்போது குறுக்கிட்ட தொகுப்பாளினி திவ்யதர்ஷினி, “முதன்முதலா பாட்டுப்பாடி வைரல் ஆனது நீங்கதான்... இன்னைக்குக்கூட வைரல் காய்ச்சலோடதான் வந்திருக்கீங்க.” என்று நடிகர் விஷால் காய்ச்சலுடன் நிகழ்ச்சிக்கு வந்திருப்பதாக விளக்கம் கொடுத்தார்.
எனினும், அவரின் தடுமாற்றம் மிகுந்த பேச்சு குறித்து வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |