கடத்தப்பட்ட துபாய் இளவரசி என்ன ஆனார்? உயிருடன் இருக்கிறாரா?: நிரூபிக்கும்படி அமீரகத்தை வலியுறுத்தும் பிரித்தானியா
துபாய் இளவரசி அவரது தந்தையாலேயே கடத்தப்பட்டு சிறைவைக்கப்பட்டது குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, அவர் உயிருடன் உயிருடன் இருப்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
துபாய் மன்னரான Sheikh Mohammed bin Rashid Al Maktoumஇன் ஆறு மனைவிகளில் ஒருவருக்கு பிறந்த 30 பிள்ளைகளில் ஒருவர் இளவரசி Latifa.
2018ஆம் ஆண்டு Latifa துபாயிலிருந்து நண்பர்களுடன் தப்ப முயலும்போது அமீரக பொலிசாரிடம் சிக்கினார்.
அவரை மயக்க ஊசி போட்டு தூக்கிச்சென்ற பொலிசார், மன்னரின் உத்தரவுப்படி அவரை ஒரு வீட்டில் அடைத்தனர்.
அங்கிருந்து எப்படியோ ஒரு மொபைலை பெற்ற Latifa, தான் சிறைவைக்கப்பட்டிருப்பது குறித்த வீடியோக்களை தன் தோழி ஒருவர் மூலம் வெளியிட்டார்.
தற்போது, அந்த வீடியோக்கள் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வீடியோக்கள் வெளியானதைத் தொடர்ந்து, பிரித்தானியா, இளவரசியின் நிலை குறித்து கேள்வி எழுப்பியுள்ளதுடன், அவர் உயிருடன் இருப்பதை நிரூபிக்குமாறு ஐக்கிய அரபு அமீரகத்தை வலியுறுத்தியுள்ளது.
பிரித்தானிய வெளியுறவு அமைச்சரான Dominic Raab, இளவரசி Latifa கடத்தப்பட்டு சூரிய ஒளி கூட கிடைக்காமல் வீடு ஒன்றில் சிறைவைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்விப்பட்ட மக்கள், அவர் உயிருடனும், நலமாகவும் இருப்பதை அறிய மக்கள் விரும்புவார்கள் என்றார்.
அத்துடன், Latifa பிரச்சினையை அமீரகத்துடன் மட்டுமல்ல, ஐக்கிய நாடுகள் சபையிலும் எழுப்ப இருப்பதாகவும், என்ன நடக்கிறது என்பதை உற்றுக்கவனிக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார் அவர்.
இந்நிலையில், ஐக்கிய நாடுகள் சபையும் Latifa பிரச்சினை தொடர்பாக அமீரகத்திடம் கேள்வி எழுப்ப உள்ளதாகவும், Latifa வெளியிட்ட வீடியோக்கள் ஆய்வு செய்யப்பட்டபின், விசாரணை ஒன்றை தொடங்க திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

