ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்கிறேன்... சாகும் வரை அது யாரென்று சொல்லமாட்டேன்: நண்பரிடம் கூறிய பொலிஸ் அதிகாரிக்கு நேர்ந்த கதி
ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்கிறேன், ஆனால், அது யாரென்று சொல்ல மாட்டேன், சாகும் வரை அந்த இரகசியம் என்னுடன் தான் இருக்கும் என்று கூறிவிட்டு பெண் ஒருவரை சந்திக்கச் சென்ற பொலிஸ் அதிகாரி ஒருவர் உண்மையாகவே எப்படி இறந்தார் என்ற விடயம் இரகசியமாகவே நீடிக்கிறது.
மத்திய அமெரிக்க நாடான Belize நாட்டின் உயர் பொலிஸ் அதிகாரி Henry Jemmott (42). தன் நண்பர் ஒருவரிடம், தான் ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்வதாக கூறியுள்ளார் Henry.
அந்த நண்பர் முன்னாலேயே அந்த பெண்ணை மொபைலில் அழைத்து பேசியும் இருக்கிறார் Henry. அப்போது, யார் அந்தப் பெண் என்று அந்த நண்பர் கேட்க, அந்த இரகசியத்தை நான் சாகும்வரை சொல்லமாட்டேன் என்று கூறியிருக்கிறார் Henry.
அத்துடன் நாட்டின் ஆடம்பர ஹொட்டல் ஒன்றில் தான் இலவசமாக தங்க இருப்பதாகவும், அந்த ஹொட்டலின் உரிமையாளர்களான, பிரித்தானிய கோடீஸ்வரர் Lord Michael Ashcroft என்பவரின் மகனான Andrew Ashcroft, மற்றும் கனேடியரான அவரது மனைவி Jasmine Hartin (32) ஆகியோர் தன் நண்பர்கள்தான் என்றும் கூறிவிட்டுச் சென்றிருக்கிறார் Henry.
அதன்படி படகுத்துறை ஒன்றில் Henryயும் Jasmineம் அமர்ந்து மறுநாள் அதிகாலை 12.45 மணி வரையிலும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்திருந்திருக்கிறார்கள். 12.45க்கு திடீரென துப்பாக்கி வெடிக்கும் சத்தம் கேட்டு பாதுகாவலர் ஒருவர் ஓடி வந்து பார்க்க, Henry கடலுக்குள் விழுந்து கிடந்திருக்கிறார், Jasmine படகுத்துறையில் இரத்தம் தோய்ந்த உடையுடன் அமர்ந்திருந்திருக்கிறார்.
Henryயை தண்ணீரிலிருந்து தூக்கியபோது, அவரது காதின் பின்னால், தலையில் குண்டுக்காயம் இருப்பது தெரியவந்துள்ளது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை. என நடந்தது என விசாரிக்க, யாரோ படகில் சென்றவர்கள் Henryயை சுட்டுவிட்டு தப்பி விட்டதாக முதலில் கூறியிருக்கிறார் Jasmine.
ஆனால், அவரிடம் கொஞ்சம் போதைப்பொருளும் இருக்கவே, போதை வழக்கில் உள்ளே தள்ளிவிடுவோம் என மிரட்ட, தானும் Henryயும் மதுபானம் அருந்திக்கொண்டிருந்ததாகவும், பிறகு தான் Henryக்கு தோள்களில் மசாஜ் செய்துகொண்டிருந்ததாகவும், அப்போது கீழே வைக்கப்பட்ட துப்பாக்கியை Henry கேட்க, அதை எடுத்து அவரிடம் கொடுக்கும்போது, தவறுதலாக கைபட்டு துப்பாக்கி வெடித்துவிட்டதாகவும் தெரிவித்தார் Jasmine.
குண்டு பாய்ந்த Henry தன் மீது விழுந்துவிட்டதாகவும், பதற்றத்தில் தன் மீது விழுந்த அவரைத் தள்ளிவிட்டதில், அவர் தண்ணீருக்குள் விழுந்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார் Jasmine.
இருவருக்கும் பாலியல் ரீதியான உறவு இல்லை என இருவரின் குடும்பத்தினரும் கூறியுள்ளனர். பின்னர் Jasmine கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கோடீஸ்வரியான Jasmine சிறை அறை ஒன்றில் கம்பிகளுக்குப் பின்னால் நிற்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
Jasmine மீது கொலைக்குற்றம் சாட்டப்பட்டுள்ளது என்றாலும், அவர் சுமார் 10,000 டொலர்கள் அபராதம் செலுத்திவிட்டு சிறைத்தண்டனையிலிருந்து தப்பிவிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள Henryயின் சகோதரியான Cherry (48), இது நீதியல்ல, இப்படி ஒரு தீர்ப்பு கிடைத்தால் தங்கள் குடும்பம் மிகவும் வருத்தப்படும் என்று கூறியுள்ளார்.
ஒரு பெண்ணுடன் டேட்டிங் செல்கிறேன், ஆனால், அது யாரென்று சொல்ல மாட்டேன், சாகும் வரை அந்த இரகசியம் என்னுடன் தான் இருக்கும் என்று கூறிவிட்டுச் சென்ற Henryயின் மரணம், உண்மையாகவே மர்மமாகிவிட்டது என்பதுதான் சோகம்.