மாயமான ட்ரம்பின் மனைவி: மெலானியாவுக்கு என்ன ஆனது?
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்கும்போதும், அது தொடர்பான பார்ட்டிகளிலும் கலந்துகொண்டார் ட்ரம்பின் மனைவி மெலானியா.
ஆனால், அதற்குப் பிறகு அவர் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை.
மெலானியா எங்கே?
ஜனவரி 24ஆம் திகதி, காட்டுத்தீயால் பாதிக்கப்பட்ட கலிபோர்னியாவுக்கு கணவருடன் சென்றபோது கடைசியாக கண்ணில் பட்டார் மெலானியா.
ஆனால், அதற்குப் பிறகு அவர் ட்ரம்ப் கலந்துகொண்ட நிகழ்ச்சிகள் உட்பட பொது நிகழ்ச்சிகள் எதிலும் பெரும்பாலும் கலந்துகொள்ளவில்லை.
அத்துடன், சமூக ஊடகங்களிலும் மெலானியா எந்த இடுகைகளையும் பதிவிடவில்லை.
Where is Melania? Is she ok? We would love to see our First Lady again.
— Kelli (@KelliMckague) February 7, 2025
ஆகவே, அமெரிக்கர்கள் மெலானியா எங்கே என சமூக ஊடகங்களில் கேள்வி எழுப்பத் துவங்கியுள்ளார்கள்.
Where is Melania?
— Gary Busby (@GaryBusby413655) February 9, 2025
Does anybody know where Melania is?
— jacpton.bluesky.social (@JACPton) February 7, 2025
இதற்கிடையில், மெலானியா தனது மகனான Barron Trump வாழும் நியூயார்க்கில் அதிக நேரம் செலவிடுவதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |