Gold Loan: தங்கநகைக்கடனை திருப்பி செலுத்தாமல் இருந்தால் என்ன நடக்கும்?
தங்கநகைக்கடனை திருப்பி செலுத்தாமல் இருந்தால் என்ன நடக்கும் என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
தங்க நகைக்கடன்
தற்போதைய காலத்தில் யாராக இருந்தாலும் ஏதாவது ஒரு கடனுடன் தான் இருக்கின்றனர். அதில், கடன் வாங்குவதற்கு முக்கியமான வழிகளில் ஒன்று கோல்டு லோன்.
பல ஆண்டுகளாக இருக்கும் இந்த லோனில் குறைந்த வட்டி, உடனடியாக கைக்கு கிடைக்கும் பணம், மிக குறைந்த ஆவணங்கள் என்பதால் பெரும்பாலானோர் இதனை தேர்ந்தெடுக்கின்றனர்.
மற்ற லோன்களை ஒப்பிடும் போது தங்கநகைக்கடனில் திருப்பி செலுத்தும் கால அளவு குறைந்தபட்சமாகும். இந்த லோனில் திருப்பி செலுத்துவதற்கான அதிகபட்ச கால அளவு 24 மாதங்கள் ஆகும். மேலும், இந்த கோல்டு லோன் வாங்க உங்களிடம் குறைந்த கிரெடிட் ஸ்கோர் இருந்தால் மட்டுமே போதுமானது.
திருப்பி செலுத்தாவிட்டால் என்னவாகும்?
நீங்கள் வாங்கும் தங்க நகைக்கடனை திருப்பி செலுத்தாவிட்டால் முதலில் நினைவூட்டல்கள் வரும். அதை நாம் பொருட்படுத்தாமல் கடனை செலுத்தாமல் இருந்தால் நம்முடைய நகைகள் ஏலம் விடப்படும்.
அதாவது, நகைகள் ஏலம் விடப்படுவதற்கு 2 வாரங்களுக்கு முன்பு கடன்பெற்றவர்களுக்கு முறையான தகவல் தெரிவிக்கப்படும். கடன் பெற்றவர்கள் வீட்டிற்கு வரும் நோட்டீஸிற்கு முறையாக பதில் அளிக்க வேண்டும்.
நோட்டீஸ் பெற்ற பிறகு வாங்கிய கடனை பாதியாக செலுத்தலாம் அல்லது கடன் செலுத்துவதற்கான கால அவகாசத்தை நீட்டித்து கேக்கலாம்.
மேலும், கடன் பெற்றவர்கள் வாங்கிய கடனை செலுத்த தவறினால் வட்டி விதிக்கப்படும். இந்த வட்டியானது வாங்கிய தொகையை பொறுத்து மாறுபடும். பொதுவாக, கோல்டு லோனுக்கு 3 சதவீதம் முதல் 12 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும்.
கடனை திருப்பி செலுத்துதல்
கடன் பெற்றவர்கள் அசல் மற்றும் வட்டியை மாதா மாதம் செலுத்தலாம். மாத வருமானம் பெறும் நபர்களுக்கு இந்த கோல்டு லோன் சிறந்த தீர்வாக இருக்கும். மாதம் தோறும் வட்டியை மட்டும் செலுத்திவிட்டு அசலை இறுதியில் செலுத்திக் கொள்ளலாம்.
கூடுதலாக, அசல் மற்றும் வட்டியை தங்களால் முடியும் போது குறிப்பிட்ட காலத்திற்கு செலுத்தி இறுதியில் மீதமுள்ள தொகையை செலுத்தலாம்.
புல்லட் பேமெண்ட் ஆப்ஷனில் அசல் மற்றும் வட்டியை செலுத்தினாலே போதுமானது. அதுமட்டுமல்லாமல், கடன் பெற்றவர்கள் திருப்பி செலுத்தாத பட்சத்தில் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கும் முன்பு நோட்டீஸ் அனுப்பப்படும். அதற்கு, இமெயில், டெக்ஸ்ட் மெசேஜ், போன் கால் மற்றும் லெட்டர் மூலமாக முறையான பதில் அளிக்க வேண்டும்.
கிரெடிட் ஸ்கோர்
நகைக்கடன் ஒப்புதல் அளிக்க கிரெடிட் ஸ்கோரிற்கு எந்தவொரு சம்மந்தம் இல்லை என்றாலும் கடனை திருப்பி செலுத்த முடியாத பட்சத்தில் கிரெடிட் ஸ்கோர் மதிப்பு பாதிக்கப்படலாம். அதாவது, கடனை திருப்பி செலுத்த தவறும் பயனர்களின் பெயர்களை கிரெடிட் பிரிவுக்கு கடன் வழங்குனர்கள் அனுப்புவார்கள்.
இதன்பின், credit bureau இது குறித்து அனைத்து NBFCs மற்றும் வங்கிகளுக்கு தெரிவிக்கும். இது கிரெடிட் ஸ்கோரினை பாதிப்பது மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் நீங்கள் வாங்கவிருக்கும் கடனுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |