இரண்டு வெவ்வேறு தடுப்பூசிகளை செலுத்தினால் என்ன ஆகும்? புதிய ஆய்வை தொடங்கியது பிரித்தானியா!
இரண்டு வெவ்வேறு வகையான கொரோனா வைரஸ் தடுப்பூசிகளைக் கொண்டு மக்களுக்கு தடுப்பூசி போடுவது குறித்த மிகப் பெரிய ஆய்வை தொடங்குவதாக பிரித்தானிய அரசு அறிவித்துள்ளது.
ஃபைசர் மற்றும் அஸ்ட்ராஜெனெகா ஆகிய கோவிட் -19 தடுப்பூசிகளின் டோஸ்களை இரண்டு ஷாட் அட்டவணையில் இணைத்தால், உருவாகும் நோயெதிர்ப்பு சக்தியை மதிப்பிடுவதற்கான ஒரு சோதனையை பிரித்தானிய அரசு வியாழக்கிழமை தொடங்கியது.
Pfizer Inc மற்றும் BioNTech இணைந்து தயாரித்த BNT162b2 எனும் தடுப்பூசியும், Oxford பல்கலைக்கழகம் மற்றும் AstraZeneca இணைந்து தயாரித்த AZD1222 எனும் தடுப்பூசியும் mRNA வகை தடுப்பூசி என்பதால், இந்த இரண்டு மருந்துகளையும் இணைத்து ஆய்வு செய்ய முடிவுசெய்யப்பட்டுள்ளது.
இந்த ஆய்வில், முதலில் ஃபைசர் தடுப்பூசியை செலுத்தி அதன் நோயெதிர்ப்பு சக்தியின் அளவு சோதிக்கப்படும். பின்னர் 4 முதல் 12 வார இடைவெளியில் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை பூஸ்டர்களாக செலுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ஆய்விற்கான ஆட்சேர்ப்பு இன்று (வியாழக்கிழமை) தொடங்குகிறது, இதில் 800-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் பங்கேற்பார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
சோதனையில் ஆன்டிபாடி மற்றும் டி-செல் பதில்களை அளவிடப்படும், அத்துடன் பக்க விளைவுககள் கண்காணிக்கப்படும்.
சோதனைக்கு தலைமை தாங்கும் ஆக்ஸ்போர்டு தடுப்பூசி நிபுணர் மத்தேயு ஸ்னேப், இந்த ஆய்வின் ஆரம்ப முடிவுகள் ஜூன் அல்லது ஜூலை மாதங்களில் வெளியிடப்படும் என கூறினார்.
ஏற்கெனவே, இதேபோன்று ரஷ்யாவின் ஸ்பூட்னிக் வி தடுப்பூசியுடன் இணைந்து அஸ்ட்ராஜெனெகாவின் ஷாட் பரிசோதிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும் தடுப்பூசிகளை இணைப்பது குறித்து மேலும் பல ஆய்வுகள் செய்யப்பட வேண்டும் என்று அஸ்ட்ராஜெனெகா நிறுவன ஆராய்ச்சித் தலைவர் Jose Baselga தெரிவித்துள்ளார்.
