வாழைப்பழத்தை தினமும் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா?
Cholestrol
Banana
Weight Loss
By Kishanthini
பொதுவாக குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் பழம் வாழைப்பழம்.
இவை சத்தானவை, சுவையானவை மற்றும் விலை மலிவானது என்பதால், அனைவரும் வாங்கி எளிதில் சாப்பிடலாம்.
ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு வாழைப்பழம் மிகவும் ஆரோக்கியமான மக்களுக்கு மிதமான உட்கொள்ளலாகக் கருதப்படுகிறது.
இது உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களையும் வழங்குகின்றது. அந்தவகையில் தினமும் வாழைப்பழம் சாப்பிடுவது நன்மையா? இல்லையா என்பதை பார்ப்போம்.
- வாழைப்பழம் தொற்று மற்றும் நோய்களிடமிருந்து உங்களை பாதுகாக்க உதவுகிறது. அவை உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கிருமிகள் மற்றும் நோய்களுக்கு எதிராக போராட உதவுகின்றன. வாழைப்பழங்கள் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியிருப்பதால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது.
- வாழைப்பழத்தில் நிறைய பொட்டாசியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது இரத்த அழுத்த அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். அவை உடலின் எலக்ட்ரோலைட் சமநிலையை உறுதிப்படுத்தவும் உதவுகின்றன.
- வாழைப்பழத்தில் பெக்டின் நிறைந்துள்ளது. இது ஒரு கரையக்கூடிய நார்ச்சத்து ஆகும். இது கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்கவும் குடல் செயல்பாட்டை அமைதிப்படுத்தவும் உதவுகிறது.
- வாரத்திற்கு 4 முதல் 6 முறை வாழைப்பழங்களை உட்கொள்பவர்களுக்கு சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்பு 50% குறைவாக உள்ளதாக கூறப்படுகிறது.
- வாழைப்பழம் உடலுக்கு எரிபொருளை வழங்குகின்றன மற்றும் உடற்பயிற்சி அமர்வுக்கு முன்னும் பின்னும் சாப்பிட சிறந்த பழம். வொர்க் அவுட் செய்வதற்கு முன், வாழைப்பழம் உங்கள் உடலை உற்சாகப்படுத்துகிறது மற்றும் உடற்பயிற்சிக்குப் பின், இது ஒரு சிறந்த மீட்பு சிற்றுண்டியாக செயல்படும்.
10ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US