தினமும் சிக்கன் சாப்பிடுவதால் உடலில் ஏற்படும் பிரச்சனைகள்- மருத்துவர்களின் எச்சரிக்கை
இன்றைய காலகட்டத்தில் பல உணவுகள் சிக்கனை மையமாக கொண்டே செய்யப்படுகிறது.
இதனை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி வாங்கி உண்ணுகிறார்கள்.
இந்நிலையில், தினமும் சிக்கன் சாப்பிடுவது உடலுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகிறார்கள்.
தினமும் கோழி இறைச்சி சாப்பிடுவதால், உடலில் யூரிக் அமிலம் அதிகரித்து, எலும்புகள் மற்றும் மூட்டுகளில் பிரச்சனைகள் உருவாகும்.
மேலும், இதய நோய் ஏற்படும் அபாயமும் உள்ளது.
சிறுநீரக குறைபாடு உள்ளவர்கள், சிக்கன் உண்பதை தவிர்க்க வேண்டுமெனவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சிக்கன் என்பதை வாரத்திற்கு ஒரு நாள் அல்லது அதிகபட்சம் இரண்டு நாள் எடுத்து கொள்ளலாம்.
தினமும் சிக்கன் சாப்பிடுவது உடல்நலத்திற்கு தீங்கானது என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
சிக்கனில் நிறைய புரதம் உள்ளது. நீங்கள் அதிகப்படியான புரதத்தை உண்ணுவதால், உங்கள் உடை அதிகரிக்க தொடங்குகிறது.
சிக்கனில் E.coli அதிகம் உள்ளது. எனவே சிக்கனை அதிகம் உட்கொள்ளுவது, பல வகையான நோய்த்தொற்றுகளின் ஆபத்து அதிகரிக்கிறது.
மேலும், சிக்கனை தினமும் சாப்பிடுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரித்து, பல வகையான பிரச்சனைகள் ஏற்படும்.
சிக்கன் அதிக வெப்பமான உணவாக கருதப்படுகிறது. இதை தினமும் சாப்பிடுவதால் உங்கள் உடலின் ஒட்டுமொத்த வெப்பநிலையை அதிகரிக்கலாம்.
எனவே தினமும் உணவில் காய்கரிகள், கீரைகள், பழங்களை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |