ரயில்வேயில் இருந்து நீக்கப்படும் பழைய ரயில்கள் என்னவாகும் தெரியுமா?
What happens to old trains after their retirement- பொதுவாக இந்திய ரயில்வே பயணிகளின் பயண தேவையை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாதுகாப்பான பயணம், குறைந்த கட்டணம் என்பதால் பொதுவாக பலரும் ரயில் பயணத்தை தான் விரும்புகிறார்கள்.
இந்தியாவில் மொத்தம் 7349 ரயில் நிலையங்கள் உள்ளன. தினமும் சுமார் ரயிலில் 2.5 கோடி மக்கள் பயணம் செய்கின்றன.
பயணிகள் ரயில்கள் மட்டுமின்றி, சரக்கு ரயில்களும் நாட்டின் போக்குவரத்தில் முக்கியப் பங்கு வகிக்கின்றன.

இந்நிலையில், ரயில்வேயில் இருந்து நீக்கப்படும் பழைய ரயில்கள் என்னவாகும் என்பது பலருக்கும் தெரியாத ஒரு விடயம்.
ரயில்கள் வயது, பாதுகாப்பு குறைபாடுகள் மற்றும் அதிகரிக்கும் பராமரிப்பு செலவுகள் உள்ளிட்ட காரணங்களால் பயன்பாட்டிலிருந்து நீக்கப்படுகின்றன.
மேலும், புதிய தொழில்நுட்பங்களுடன் கூடிய ரயில்கள் அறிமுகமாகும்போது, பழைய ரயில்களை தொடர்ந்து இயக்குவது சிரமமாகிறது.
ஒரு ரயில் தனது கடைசி பயணத்தை முடித்த பிறகு, அதன் பாகங்கள் ஆய்வு செய்யப்படும்.
பயன்பாட்டிலிருந்து நீக்கப்படும் ரயில் பெட்டிகள் மற்றும் என்ஜின்கள் தனித்தனியாக பிரிக்கப்படுகின்றன. அவற்றில் உள்ள உலோகப் பொருட்கள் மறுசுழற்சி செய்யப்பட்டு மீண்டும் பயன்படுத்தப்படுகின்றன.
பழைய ரயில்களில் உள்ள இருக்கைகள், சக்கரங்கள் மற்றும் மின்சார உபகரணங்கள் உள்ளிட்ட நல்ல நிலையில் இருக்கும் பாகங்கள் மற்ற ரயில்களில் பயன்படுத்தப்படுகின்றன.

சில பழைய ரயில் பெட்டிகள் அலுவலகங்கள், சேமிப்புக் கிடங்குகள் மற்றும் சிற்றுண்டிச் சாலைகளாக மாற்றப்படுகின்றன. இதன் மூலம் பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்ட ரயில் பெட்டிகளுக்கும் புதிய பயன்பாடு கிடைக்கிறது.
மேலும், வரலாற்று சிறப்புமிக்க சில பழைய ரயில்கள் அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்படுகின்றன.
சில ரயில்கள் பாரம்பரிய ரயில் பயணங்களுக்காகவும் பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் பழைய கால ரயில் பயண அனுபவத்தை மக்கள் அறிந்துகொள்ள முடிகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |