வெற்றிக்கு பின் கோஹ்லியின் மார்பில் சாய்ந்து கூறியது என்ன? வில்லியம்சன் சொன்ன உருக்கமான பதில்
உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் இறுதிப் போட்டியில், வெற்றிக்கு பின் கோஹ்லியின் மார்பில் சாய்ந்தது குறித்து, நியூசிலாந்து அணியின் கேப்டன் கானே வில்லியம்சன் கூறியுள்ளார்.
இங்கிலாந்தில் நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரின் இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
இந்த வெற்றியின் போது நியூசிலாந்து அணியின் கேப்டன், கானே வில்லியம்சன், கோஹ்லியின் மார்பில் சாய்ந்து பேசுவது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகியது.
இது குறித்து தற்போது ஊடகம் ஒன்றிற்கு வில்லியம்சன் அளித்துள்ள பேட்டியில், இறுதிப்போட்டியில் வெற்றிபெற்ற அந்த தருணம் மிகச் சிறந்த தருணம். அது அற்புதமான உணர்வை கொடுத்தது. இந்தியா போன்ற பலமான அணியை வீழ்த்துவது எவ்வளவு கஷ்டம் என்பது எனக்கு தெரியும்.
வெற்றிக்குப் பிறகு கோலியின் நெஞ்சில் சாய்ந்துக்கொண்டேன்.
ஏனெனில் கோhலிக்கும் எனக்குமான உறவு பல ஆண்டுகளுக்கு முன்னதாக ஏற்பட்டது. கிரிக்கெட்டையும் கடந்து நாங்கள் ஆழமான நண்பர்கள்.
எங்களுக்குள் ஒரு ஆழமான நட்பு இருக்கிறது. இது எங்கள் இருவருக்குமே தெரியும் என கூறியுள்ளார்.