ரஷ்யா உதவவில்லை என்றால் என்ன... நாங்கள் இருக்கிறோம்: ஜேர்மனிக்கு உதவிக்கரம் நீட்டிய பிரான்ஸ்...
எரிவாயு விடயத்தில் ரஷ்யா உதவவில்லை என்றால் என்ன, நாங்கள் இருக்கிறோம் என ஜேர்மனிக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளது பிரான்ஸ்.
தன் சக ஐரோப்பிய நாடாகிய ஜேர்மனிக்கு முதன்முறையாக எரிவாயு விநியோகத்தைத் துவக்கியுள்ளது பிரான்ஸ்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததைத் தொடர்ந்து அந்நாட்டின் மீது விதிக்கப்பட்ட தடைகளுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கும் எரிவாயுவின் அளவைக் குறைத்தது ரஷ்யா.
குறிப்பாக, ஜேர்மனி ரஷ்ய எரிவாயுவை பெருமளவில் சார்ந்திருந்ததால், ரஷ்யா எரிவாயு வழங்கலைக் குறைத்த விடயம் அந்நாட்டில் பயத்தை உருவாக்கியது.
குளிகாலத்தை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்ற பயமும், அப்படியே குளிர்காலத்தை சமாளித்தாலும், அதற்குப் பின் எரிவாயுவுக்கு என்ன செய்யப்போகிறோம் என்ற கவலையும் ஜேர்மனியை பிடித்துக்கொண்டது.
GETTY IMAGES
இந்நிலையில், ஐரோப்பிய ஒற்றுமையைக் காட்டும் விதமாக, ஜேர்மனியின் சக ஐரோப்பிய நாடாகிய பிரான்ஸ் ஜேர்மனிக்கு எரிவாயு விடயத்தில் உதவ முன்வந்துள்ளது.
அதன்படி, குழாய் மூலமாக ஜேர்மனிக்கு எரிவாயு வழங்கலைத் துவங்கியுள்ளது பிரான்ஸ்.
பிரான்ஸ் எரிவாயு நிறுவனமான GRTgaz நிறுவனம், நாளொன்றிற்கு 31 ஜிகாவாட் மணி அளவுக்கு எரிவாயுவை குழாய் மூலம் பிரான்சுக்கு அனுப்ப இருப்பதாக தெரிவித்துள்ளது.
இந்த எரிவாயுவின் அளவு குறைவுதான் என்றாலும், இப்போதைக்கு ஜேர்மனிக்கு அது அவசியம் தேவைதான் என்பது குறிப்பிடத்தக்கது.