ட்ரம்பின் வரி விதிப்பு பிரித்தானியா மீது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்? நிபுணர்கள் கருத்து
ட்ரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள விடயம், பல நாடுகள் மீது தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அவர் ஜனாதிபதியாக பதவியேற்றதும் என்னென்ன செய்யப்போகிறார் என்பதை அறிய பல நாடுகள் ஆர்வமாக உள்ளன.
ட்ரம்பின் வரி விதிப்பு பிரித்தானியா மீது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும்?
இந்நிலையில், ட்ரம்பின் வரி விதிப்பு பிரித்தானியா மீது எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்னும் ஒரு கேள்வி பிரித்தானியர்களிடையே நிலவுவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.
அந்தக் கேள்விக்கு நிபுணர்கள் சிலர் பதிலளித்துள்ளார்கள்.
இங்கிலாந்து வங்கி நிர்வாகிகள், ட்ரம்ப் பிரித்தானிய பொருட்கள் மீது 10 சதவிகிதம் வரை வரி விதிக்கக்கூடும் என கருதுகிறார்கள்.
ஆனால், Reuters பத்திரிகை மேற்கொண்ட ஆய்வொன்றோ, பிரித்தானியா மொத்தமாகவே ட்ரம்பின் வரி விதிப்பிலிருந்து தப்பக்கூடும் என தெரிவித்துள்ளது.
என்ன காரணம்?
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தைவிட்டு வெளியேறிவிட்டதால், அது தற்போது ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடு எல்ல என்பதால், ட்ரம்ப் பிரித்தானியாவை குறிவைக்க மாட்டார் என கருதப்படுகிறது.
இன்னொரு விடயம், அமெரிக்காவுக்கு பிரித்தானியா ஏற்றுமதி செய்யும் பொருட்களைவிட, அது அமெரிக்காவுக்கு வழங்கும் சேவைகள்தான் அதிகம்.
ஆக, ட்ரம்பின் வரி விதிப்பு பிரித்தானியா மீது மிகக்குறைந்த அளவிலான தாக்கத்தையே ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகிறார்கள்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |