காதலர் தினத்தில் இந்தியாவில் அதிகம் வாங்கப்பட்ட பொருள் என்ன தெரியுமா?
கடந்த பிப்ரவரி 14 ஆம் திகதி, உலகம் முழுவதும் காதலர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்த காதலர்கள், தங்கள் துணைக்கு விதவிதமான பரிசுப்பொருட்கள் வழங்கி காதலை வெளிப்படுத்தினர்.
இந்த தினத்தில் வாடிக்கையாளர்கள் எந்த நகரத்தில் இருந்து அதிகளவில் பொருட்கள் வாங்கினார்கள், எந்த பொருட்களை அதிகமாக வாங்கினார்கள் என்ற அறிக்கையை ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் வெளியிட்டுள்ளது.
சாக்லேட்கள்
இதன்படி, இந்தியாவில் இந்த காதலர் தினத்தில் சாக்லேட் அதிகளவில் வாங்கப்பட்ட பொருளாக உள்ளது. ஒரு நிமிடத்திற்கு சராசரியாக 1,042 சாக்லேட் ஆர்டர்கள் வந்துள்ளது.

இதய வடிவிலான சாக்லேட்டுகள் அதிகம் தேடப்பட்ட பரிசுகளில் ஒன்றாக மாறியது. இதில் பெரும்பாலானவர்கள் ஒன்றுக்கும் மேற்பட்ட சாக்லேட்டுகளை வாங்கியுள்ளனர்.
விலையுயர்ந்த பரிசாக, கொல்கத்தாவில் இருந்து ஒருவர் ரூ.25,000 மதிப்புள்ள தனிப்பயனாக்கப்பட்ட சாக்லேட்டை வாங்கியுள்ளார்.
அடுத்தபடியாக, கட்டாக்கை சேர்ந்த ஒரு வாடிக்கையாளர், ஒரே ஆர்டரில் ஒப்பனைக்காக ரூ.15,093 செலவிட்டார். சூரத்தை சேர்ந்த வாடிக்கையாளர், ஒரே ஆர்டரில் ரூ.10,845 மதிப்புள்ள உடல் மற்றும் முடி பராமரிப்பு பொருட்களை ஆர்டர் செய்தார்.
பெங்களூரு முதலிடம்
முந்தைய வாரத்துடன் ஒப்பிடும்போது ரோஜாக்களுக்கான தேடல்கள் 10 மடங்கு அதிகரித்தன. டெடிபியர் பொம்மை ஆர்டர்கள் கடந்த ஆண்டை விட 568% அதிகரித்தன.

நகைகள், வாழ்த்து அட்டைகள் மற்றும் பட்டுப் பொம்மைகளுக்கான தேடல்களும் ஆண்டுக்கு ஆண்டு 10 மடங்கு அதிகரித்ததுள்ளதாக தெரிவித்துள்ளது.
காதலர் தினத்தன்று, கிட்டத்தட்ட பாதி ஆர்டர்கள் 'மற்றவர்களுக்கான ஆர்டர்கள்' (OFO - Order For Others) ஆக வழங்கப்பட்டன.
நகர வாரியாக, ஒட்டுமொத்த காதலர் தின பரிசு பட்டியலில் பெங்களூரு முதலிடம் பிடித்தது. டெல்லி, மும்பை, ஹைதராபாத் மற்றும் சென்னை ஆகியவை அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |