கனேடிய குடியுரிமை சான்றிதழ் என்பது என்ன?: அதைப் பெறுவது எப்படி?
கனேடிய குடியுரிமை பெறுவது உலகின் மிகச்சிறந்த நாடுகளில் ஒன்றில் வாழ்வதற்கும் பணி செய்வது முதலான ஏராளம் பலன்களை தருவதாகவும் காணப்படுகிறது.
ஆகவே, கனேடியர்கள் தங்கள் குடியுரிமை நிலையை வெளிநாடுகளில் பிறந்த தங்கள் பிள்ளைகளுக்கும் வழங்க விடும்புகிறார்கள். அதேபோல, கனேடிய பெற்றோரைக் கொண்ட பிள்ளைகளும் தாங்களே கனேடிய குடியுரிமைக்கு விண்ணப்பிக்கிறார்கள்.
கனேடிய குடியுரிமை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
பொதுவாக, கனடாவில் பிறந்த பெற்றோரைக் கொண்ட வயது வந்தவர்கள், தாங்கள் கனேடிய குடியுரிமைக்கு தகுதியுடையவர்கள் என்று எண்ணியும் அது குறித்து உறுதியாக அறியாத நிலையில், கனேடிய குடியுரிமைக்கான ஆதாரத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிப்பதுண்டு. அதுபோக, வெளிநாடுகளில் பிறந்த பிள்ளைகளையுடைய பெற்றோர், தங்கள் பிள்ளைகள் சார்பிலோ அல்லது பிள்ளைகளே தங்களுக்காகவோ இந்த கனேடிய குடியுரிமைக்கான ஆதாரத்திற்கான விண்ணப்பத்தை சமர்ப்பிக்கிறார்கள்.
அதற்காக கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு, விண்ணப்பிப்பவரின் பெற்றோர்களில் ஒருவராவது அவர் பிறக்கும் நேரத்தில் கனேடிய குடிமகனாக இருந்தார் என்பதற்கான ஆதாரத்தை எதிர்பார்க்கிறது. உதாரணமாக, பெற்றோரின் பிறப்புச் சான்றிதழ், குடியுரிமை அட்டை அல்லது குடியுரிமை சான்றிதழை ஆதாரமாக வழங்கலாம்.
இனி கனேடிய குடியுரிமை சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி என்பதை சற்று விவரமாக பார்க்கலாம்...
படி 1: கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் இணையதளத்தில் விண்ணப்பம் முதலான ஆவணங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள்.
படி 2: விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துங்கள், பூர்த்தி செய்த விண்ணப்பத்தை கனேடிய புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பின் இணையதளத்தில் சமர்ப்பியுங்கள்.
படி 3: உங்கள் விண்ணப்பம் பதிவேற்றம் செய்யப்பட்டுவிட்டதன் அடையாளமாக அளிக்கப்படும் acknowledgement of receipt என்னும் ரசீதுக்காக காத்திருங்கள்.
படி 4: உங்கள் விண்ணப்பம் பார்வையிடப்பட்டு பரிசீலிக்கப்படும்வரை காத்திருங்கள்.
ஒவ்வொரு விண்ணப்பமும் பரிசீலிக்கப்பட வித்தியாசமான கால அளவு தேவை என்பதை கவனத்தில் கொள்ளவும். உங்கள் விண்ணப்பம் எந்த நிலையில் உள்ளது என்பதை நீங்கள் சோதிக்க முடியும். ஒருவேளை அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு கூடுதல் ஆவணங்கள் சிலவற்றை உங்களிடம் கேட்கக்கூடும்.
மருத்துவ சிகிச்சை, சமூக காப்பீட்டு எண் பெறுதல், பணியில் இணைதல் போன்ற குறிப்பிட்ட சில காரணங்களுக்காக அவசரமாக உங்கள் விண்ணப்பத்தைப் பரிசீலிக்கக் கோரவும் சாத்தியம் உள்ளது.
மேலதிக தகவல்களுக்கு...https://www.cicnews.com/2022/11/understanding-the-need-for-proof-of-citizenship-in-canada-1131027.html