வெள்ளை பூஞ்சை தொற்று என்றால் என்ன ? யாரை அதிகம் பாதிக்கின்றது?
white fungus
By Kishanthini
கொரோனா அதை தொடர்ந்து கருப்பு பூஞ்சை இப்போது அதை காட்டிலும் பயங்கரமான வெள்ளை பூஞ்சை என்று சொல்லப்படுகின்றது. இது வேகமாக இந்திய மக்களின் பரவி வருவதாக தகவல் வெளியாகி வருகின்றது.
இது கருப்பு பூஞ்சை தொற்றை விட வெள்ளை பூஞ்சை தொற்று மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது நுரையீரல் மற்றும் உடலின் பிற பாகங்களான நகங்கள், தோல், வயிறு, சிறுநீரகம், மூளை, அந்தரங்க உறுப்புகள், வாய் ஆகியவற்றை பாதிப்பதாக கூறப்படுகின்றது.
அந்தவகையில் இந்த வெள்ளை பூஞ்சை யாரை அதிகம் பாதிக்கின்றது என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.
யாரை அதிகம் பாதிக்கின்றது?
- கருப்பு பூஞ்சை தொற்று போன்றே பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தியை கொண்டவர்களுக்கு வெள்ளை பூஞ்சை நோய் ஆபத்தானது என்று கூறப்படுகின்றது.
- நீரிழிவு நோயாளிகள் மற்றும் நீண்ட காலத்துக்கு ஸ்டிராய்டு மாத்திரைகள் உட்கொள்பவர்களுக்கு வெள்ளை பூஞ்சை தொற்று பாதிக்கு எளிதாக உண்டாகலாம்.
- கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவருக்கு ஆக்ஸிஜன் தேவைப்படும் நிலையில் இவர்களுக்கு வெள்ளை பூஞ்சை பாதிப்பு உண்டாகிறது. இந்த வெள்ளை பூஞ்சை ஆனது நேரடியாக நுரையீரலை பாதிக்க செய்கிறது.
- மருத்துவர்கள் அறிவுரைப்படி புற்றுநோய் நோயாளிகள் வெள்ளை பூஞ்சைக்கு எதிராக இருந்தார்கள். வெள்ளை பூஞ்சை குழந்தைகள் மற்றும் பெண்களையும் பாதிக்க செய்கிறது.
- கருப்பு பூஞ்சை போன்று இந்த வெள்ளைபூஞ்சை நோயும் மக்களின் எதிர்ப்பு சக்தி மீது பாதிப்பு உண்டாக்க செய்யும். நீண்ட நாட்கள் நீரிழிவு நோயோடு இருப்பவர்கள், ஸ்டீராய்டு மருந்து எடுத்துகொள்பவர்கள் இந்த தொற்று ஆபத்து அதிகமாக இருப்பவர்கள் என்கிறார்கள்.
சிகிச்சை உண்டா?
- இத்தொற்றுக்கு சிகிச்சையளிக்க நரம்பு வழியாக மருந்து செலுத்தப்படுகிறது. ஒரு டோஸின் இந்திய விலை 3500 ரூபாய் வரை என்று சொல்லப்பட்டுகின்றது. இதை எட்டு வாரங்கள் வரை தினசரி பயன்படுத்த வேண்டும் என்கிறார்கள்.
- கருப்பு பூஞ்சை, வெள்ளை பூஞ்சை இரண்டையும் ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் குணப்படுத்திவிடலாம் என்நு கூறப்படுகின்றது.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US