Anxiety attack என்றால் என்ன? உடனடியாக செய்ய வேண்டிய யுத்திகள் என்ன?
வேகமாக ஓடி கொண்டிருக்கும் உலகில் பலருக்கும் பல பிரச்சனை இருக்கிறது.
இது பலரின் அன்றாட வாழ்க்கை, குடும்பம், வேலை, உணர்வுகள் என பலவற்றையும் பாதிப்புக்கும் உள்ளாக்குகிறது.
அது போன்ற ஒரு பிரச்சினை தான் Anxiety attack. திடீரெனெ மேல்சொன்ன ஏதோ ஒரு காரணத்தால் தூண்டப்பட்டு எப்போது வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் இந்த anxiety attack ஏற்படலாம்.
அது போன்ற சூழலில் உடனடியாக செய்ய வேண்டிய ஒரு சில யுக்திகளை தெரிந்துக் கொள்வது அவசியமானது ஆகும்.
Anxiety attack என்றால் என்ன?
ஒரு சிலருக்கு சில பொருட்களை பார்த்தால், சில சூழல், சில விஷயங்கள், சில நேரங்களில் காரணமே இல்லாமல் மனஅழுத்தம் அதிகரித்து உடல் வியர்த்து போய், பதற்ற நிலைக்கு ஆளாகி, கைகள் நடுங்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள்.
இதைத்தான் ஏன்சைட்டி(anxiety) என்று கூறுகிறோம். இது ஒரு மனரீதியான உளவியல் பிரச்சனை ஆகும்.
Anxiety attack இன் அறிகுறிகள்
- இறந்துவிடுவோம் என்ற பயம் அல்லது காரணமற்ற பயம்
- பதட்டமான மனநிலை
- வழக்கத்துக்கு மாறான வேகமான
- இதயத்துடிப்பு வியர்த்து போதல்
- உடல் சோர்வு
- குளிர்வது போல் உணர்தல் அல்லது கை கால் உதறுதல்
- ஆழ்ந்த மற்றும் வேகமாக மூச்சு விடுதல்
- கவனச்சிதறல்
இதனனை தடுக்க என்ன செய்யலாம்?
- இது போன்ற சூழலில் மூளையில் உள்ள சிந்தனை முழுவதும் எதிர்மறை எண்ணங்களால் நிறைந்திருக்கும். , அது உண்மை இல்லை என்பதை புரிந்துக் கொண்டு உங்கள் பழைய நிலைக்கு திரும்புவதற்கான வழியை நீங்கள் கண்டறிய வேண்டும்.
- Anxiety attack வரும்போது உங்களது மூச்சுக்காற்று வேகமாக வெளி வந்துகொண்டிருக்கும். அப்போது கொஞ்சம் நிறுத்தி நான்கு முறை மூச்சை ஆழமாக உள்ளிளித்து அப்படியே நான்கு முறை வெளியே விடுங்கள். இது வேகமாக துடித்துக் கொண்டிருக்கும் உங்களது இதயத்துக்கு ஓய்வு கொடுத்து இயல்பு நிலைக்கு மாற்றும்.
- இது போன்ற நேரங்களில் உங்களுக்கு பிடித்த மணமுள்ள ஏதாவது பொருளை பயன்படுத்தி முகர்ந்து பாருங்கள்.
- திடீரென்று ஏதோ வேலை செய்து கொண்டிருக்கும்போதோ அல்லது அல்லது வெளியில் இருக்கும்போதோ இது போன்று நிகழ்ந்தால் வேலையை நிறுத்திவிட்டு சிறிது நேரம் நடந்து விட்டு வாருங்கள்.
- பொதுவாக இந்த சூழலில் உங்கள் மண்டைக்குள் இருக்கும் மனஅழுத்தத்தை வெளியே தூக்கி எரிய வேண்டும்.
- முதலில் உங்களுக்கு anxiety இருப்பது தெரிய வருகிறது அல்லது சந்தேகம் இருக்கிறது என்றால் மனநல மருத்துவரை அல்லது உளவியல் நிபுணரை அணுகுங்கள்.
இதற்கு ஆலோசனை என்ன?
- முதல் கட்டத்திலேயே மனநல மருத்துவரை நாடி விடுவதுதான் சரியான யோசனை. அதன் பிறகு தெரப்பி மூலமாகவோ மருத்துவரின் வழிகாட்டுதலின் பேரிலோ நீங்கள் இதிலிருந்து விடுபடலாம்.
-
பொது சமூகத்தில் இது போன்ற நிலைகளை மனநோய் என்று பாவிக்கும் நிலை இருக்கிறது. இது உங்கள் உடலில் இருக்கும் நிலை. இது எல்லார்க்குள்ளும் இருக்கிறது. எனவே, உங்களுக்கு இது அதிகமாகும் போது மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்றுக் கொள்ளுங்கள்.