Flower Moon என்று அழைக்கப்படும் இன்றைய பௌர்ணமி... சில சுவாரஸ்ய தகவல்கள்
பௌர்ணமி தினமான இன்று முழு நிலவு வானில் தோன்ற இருக்கும் நிலையில், இன்றைய பௌர்ணமி, Flower Moon என்று அழைக்கப்படுகிறதாம்.
Flower Moon என்பது என்ன?
இன்று, அதாவது, மே மாதம் 23ஆம் திகதி, வியாழக்கிழமை பௌர்ணமி தினமாகும். இந்த முறை, முழு நிலவு செவ்வாய்க்கிழமை இரவு முதல், வெள்ளிக்கிழமை மாலை வரை தெரியும் என நாசா தெரிவித்துள்ளது. எந்த உபகரணங்களின் உதவியும் இன்றி, வானம் தெளிவாக இருக்குமானால், இந்த நிலவை கண்டு களிக்கலாம்.
இம்மாதத்தின், அதாவது, மே மாதத்தின் பௌர்ணமி நிலவு, Flower Moon அல்லது மலர் நிலவு என அழைக்கப்படுகிறது. பூர்வக்குடியினரான அமெரிக்கர்கள், இம்மாதம் மலரும் மலர்களின் நினைவாக இம்மாத பௌர்ணமிக்கு மலர் நிலவு என பெயரிட்டுள்ளனர்.
பல்வேறு நாடுகளில், ஜோதிடத்தில் இன்றைய நாள் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |