பறிப்போன அரச பதவி, ஆண்ட்ரூ அரண்மனையில் இருந்து வெளியேற்றம்
பிரித்தானிய அரச பதவியில் இருந்து இளவரசர் ஆண்ட்ரூ விடுவிக்கப்பட்டதோடு அரண்மனையில் இருந்தும் வெளியேற்றப்பட்டுள்ளார்.
இளவரசர் ஆண்ட்ரூ பதவிகளை பறித்த மன்னர்
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம், சீனா உடனான தொடர்பு போன்ற முக்கிய விவகாரங்களால் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளை தொடர்ந்து பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ வின் பட்டங்கள் மற்றும் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது.

மேலும் விண்ட்சர் கோட்டைக்கு அருகில் உள்ள ராயல் லாட்ஜ் வசிப்பிடத்தையும் இளவரசர் ஆண்ட்ரூ காலி செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ இனி வரும் நாட்களில் ஆண்ட்ரூ மவுண்ட்பேட்டன்-விண்ட்சர் என்று மட்டுமே அறியப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரூ-வின் புதிய யதார்த்தம்
அரச பதவி பறிக்கப்பட்டு, 30 அறைகள் கொண்ட ராயல் லாட்ஜிலிருந்து வெளியேற்றப்பட்ட முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ, பிரித்தானிய மன்னர் சார்லஸுக்கு சொந்தமான சாண்ட்ரிங்ஹாம் எஸ்டேட்டில் உள்ள தனிக் குடியிருப்புக்கு மாறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சகோதரரான மன்னர் மூன்றாம் சார்லஸ் இடமிருந்து தனிப்பட்ட நிதியுதவியை முன்னாள் இளவரசர் ஆண்ட்ரூ பெறுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரூ மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை அவர் தொடர்ந்து மறுத்து வந்தாலும், அவர் எடுத்த தீவிரமான தவறான முடிவுகளுக்கு இந்த நடவடிக்கைகள் அவசியமானது என்று பக்கிங்ஹாம் அரண்மனை தெரிவித்துள்ளது.
மன்னர் சார்லஸின் இந்த தீர்க்கமான முடிவை தொடர்ந்து டியூக் ஆஃப் யார்க் என்ற பட்டத்தை இளவரசர் ஆண்ட்ரூ இழந்து இருப்பதுடன் அவரின் உத்தியோகபூர்வமான அரச வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |