ஜேர்மனியில் அதிக ஊதியம் வழங்கும் பணிகள் எவை?
2026ஆம் ஆண்டு நிலவரப்படி, ஜேர்மனியில் அதிக ஊதியம் வழங்கு பணிகள் எவை என பார்க்கலாம்.
ஜேர்மனியில் அதிக ஊதியம் வழங்கும் பணிகள்
ஜேர்மனியில் அதிக ஊதியம் வழங்கும் பணிகளில் முதலிடம் பிடிப்பது, சட்டத்தரணி பணி ஆகும். சட்டத்தரணிகள், சராசரியாக ஆண்டொன்றிற்கு 80,000 யூரோக்கள் ஊதியம் பெறுகிறார்கள். ஒரு யூரோ என்பது, இலங்கை மதிப்பில் 365.54 ரூபாய் ஆகும்.

அடுத்தபடியாக, அதிக ஊதியம் பெறுவோர், வணிகம் மற்றும் மேலாண்மை துறையில் பணி செய்வோர். அவர்களுடைய சராசரி ஆண்டு வருமானம், 73,000 யூரோக்கள்.
மூன்றாவதாக அதிக ஊதியம் பெறுவோர், மருத்துவம் மற்றும் சுகாதாரத் துறையில் பணி செய்வோர். அவர்களுடைய சராசரி ஆண்டு வருமானம், 72,000 யூரோக்கள்.
அதைத்தொடர்ந்து அதிக ஊதியம் பெறுவோர், தகவல் தொழில்நுட்பத்துறையில் பணி செய்வோர். அவர்களுடைய சராசரி ஆண்டு வருமானம், 71,000 யூரோக்கள்.
தகவல் தொழில்நுட்பத்துறையினருக்கு அடுத்தபடியாக அதிக ஊதியம் பெறுவோர், பொறியாளர்கள். அவர்களுடைய சராசரி ஆண்டு வருமானம், 65,000 யூரோக்கள்.

பொறியாளர்களுக்கு அடுத்தபடியாக அதிக ஊதியம் பெறுவோர், கணிதத்துறையில் பணி செய்வோர். அவர்களுடைய சராசரி ஆண்டு வருமானம், 60,000 யூரோக்கள்.
கணிதத்துறையில் பணி செய்வோருக்கு அடுத்தபடியாக, இயற்கை அறிவியல் துறையினர் அதிக ஊதிய பெறுகிறார்கள். அவர்களுடைய சராசரி ஆண்டு வருமானம், 55,000 யூரோக்கள்.
அவர்களைத் தொடர்ந்து, கட்டிட வடிவமைப்புத்துறையில் பணி செய்வோர் அதிக ஊதியம் பெறுகிறார்கள். அவர்களுடைய சராசரி ஆண்டு வருமானம், 50,000 யூரோக்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |