Statue of Liberty உள்ளே என்னதான் இருக்கிறது?
நியூ ஜெர்சி மற்றும் நியூ யார்கிற்கு நடுவிலே இருக்கும் நியூ யார்க் ஹார்பரில் அமைந்திருக்கிறது லிபெர்ட்டி தீவு.
இந்த லிபெர்ட்டி தீவிலே தான் லிபெர்ட்டி ஸ்டேச்சு அமைந்திருக்கிறது. லிபேர்ட்டி ஸ்டேச்சு பிரதிநிதித்துவப்படுத்துவது,
சுதந்திரத்தையாகும்.அச்சிலையின் வலது கை ஒரு தீப்பந்தந்தத்தை ஏந்தியவாறு உள்ளது.அச்சிலையின் இடதுக்கையில் அமெரிக்க நாட்டு சுதந்திரத்தை உரோமன் இலக்க வடிவில் அச்சிடப்பட்ட ஒரு புத்தகத்தை ஏந்தியவாறு அமைந்துள்ளது.
இச்சிலை 46 மீ உயரமுடையது.இச்சிலையினருகே ஒரு மனிதன் நின்றால் அதன் கால் பெருவிரல் உயரத்திலிருப்பார்.இது செப்பினால் செய்யப்பட்டது,இதன் நிறம் செப்பு நிறத்திலிருந்து இயற்கை தாக்கத்தினால் பச்சை நிறத்திற்கு மாறிவிட்டது.
இதனை பிரெஞ்சுக்கலைஞரான பிரெட்ரிக் ஆகஸ்ட் பர்த்தோலி வடிவமைத்துள்ளார்.
ஸ்டேச்சுவின் உள்பகுதியில் ஒரு இரும்பினால் ஆன உலோக்கம்பிகள் பொறுத்தப்பட்டுள்ளன.இது முதலில் பாரிஸில் 10 வருடங்களாகக் கட்டப்பட்டுள்ளது.அதன்பின் இச்சிலையை 350 துண்டுகளாக பிரித்து இச்சிலை அமைந்துள்ள தீவிற்கு கப்பலில் கொண்டுவந்துள்ளனர்.
இச்சிலையின் உள்ளே செல்வதற்கு நுழைவுச்சீட்டுகள் அவசியமாகும். சிலையின் கால்ப்பகுதியில் நுழைவு வாசல் அமைந்துள்ளது.
உள்ளே நுழைந்ததும் வரவேற்பறை அமைந்துள்ளது அதனருகில் 192 படிகளைக்கொண்ட படிக்கட்டு மற்றும் மின்தூக்கியும் 7 மாடிகளும் இங்கு காணப்படுகிறது.7ம் மாடியைக்கடந்த பின் சிலையின் தலைப்பகுதிக்கு சென்று துறைமுகத்தினை பார்வையிடலாம்.