இறப்புக்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கிறது?: ஆவியிடமே நேரடியாக கேட்ட இளம்பெண்!
சிலர் ஆவிகள் நடமாட்டத்தை உணர்வதுண்டு, சிலரோ சில சத்தங்களைக் கேட்பதும், சிலர் சில வாசனைகளை உணர்வதும் உண்டு.
ஆனால், அமெரிக்கப் பெண் ஒருவரோ, ஆவிகளுடன் நண்பர்கள் அல்லது அக்கம்பக்கத்தவர்கள் போல பழகுகிறார்.
தினமும் தான் ஆவிகளை சந்திப்பதாகத் தெரிவிக்கிறார் அமெரிக்காவிலுள்ள Wilmington என்னும் இடத்தில் வாழும் ரெபேக்கா (Rebekah, 31).
Wilmington என்னும் நகரம்தான் அமெரிக்காவிலேயே அதிக பேய்கள் நடமாடும் இடமாக கருதப்படுகிறதாம். அந்த இடத்தில் வாழும் ரெபேக்காவோ சற்று வித்தியாசமான அனுபவங்களை சந்தித்து வருகிறார்.
Image: instagram.com/rebekahtheghostguide
அதாவது ஆவி நடமாட்டம், பேய், பூதம் என பயப்படாமல், அவற்றுடன் அவர் சாதாரணமாக பேசிவருவதாக தெரிவிக்கிறார் ரெபேக்கா.
அப்படி ஒரு ஆவியிடம், இறப்புக்குப் பின் வாழ்க்கை எப்படி இருக்கிறது என்று கேட்டாராம் ரெபேக்கா. தான் உயிருடன் இருக்கும்போது வழக்கமாக நதி ஒன்றிற்கு செல்வது போலவே இப்போதும் சென்றுகொண்டிருந்த அந்த ஆவியிடம் இப்போது வாழ்க்கை நன்றாக இருக்கிறதா என்று கேட்க, நன்றாக இருக்கிறது என்று சொன்னதாம் அந்த ஆவி, உடனே அந்த ஆவிக்கு வாழ்த்துச் சொல்லி விடைகொடுத்தாராம் ரெபேக்கா.
Image: instagram.com/rebekahtheghostguide
சமீபத்தில்தான் உயிரிழந்த சிலருடைய ஆவிகளை சந்திக்கும்போது மட்டும், அவை சற்று நோய்வாய்ப்பட்டது போலவும், காயம்பட்டதுபோலவும் காணப்படுமாம்.
எல்லாவற்றிற்கும் மேல், நம்பிக்கை வந்தால் மட்டுமே ஆவிகள் தன் வாழ்வில் என்ன நடந்தது, தான் எப்படி கொடூரமாக கொல்லப்பட்டேன் என்பதுபோன்ற விடயங்களை பகிர்ந்துகொள்ளும் என்கிறார் ரெபேக்கா.
Image: tiktok.com/@rebekahtheghostguid
Image: instagram.com/rebekahtheghostguide