கத்தியால் குத்தப்பட்ட சல்மான் ருஷ்டியின் தற்போதைய நிலை என்ன? அவருடைய மகன் வெளியிட்டுள்ள தகவல்
*பிரபல பிரித்தானிய எழுத்தாளரான சல்மான் ருஷ்டி நியூயார்க்கில் உரையாற்றச் சென்றபோது கத்தியால் குத்தப்பட்டார்.
*தற்போது அவரது நிலைமையில் சற்று முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் பிறந்த பிரபல பிரித்தானிய அமெரிக்க எழுத்தாளரான சல்மான் ருஷ்டி (75), கத்தியால் குத்தப்பட்டு படுகாயமடைந்த நிலையில், தற்போது அவரது நிலைமையில் சற்று முன்னேற்றம் காணப்படுவதாக அவரது மகன் தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய சாத்தானின் கவிதைகள் என்ற புத்தகத்தை எழுதியதால் இஸ்லாமியர்களின் கோபத்துக்கு ஆளான சல்மான் ருஷ்டி, நியூயார்க்கில் உரையாற்றச் சென்ற நிலையில், Hadi Matar (24) என்னும் நபர் மேடையேறி ருஷ்டியை சரமாரியாகக் கத்தியால் குத்தினார்.
image- news.sky
கண் மற்றும் கல்லீரல் உட்பட பல உறுப்புகள் பாதிக்கப்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ருஷ்டிக்கு பல அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்நிலையில், தற்போது அவருக்குப் பொருத்தப்பட்டிருந்த வென்டிலேட்டர் அகற்றப்பட்டுள்ளதாக, அதாவது அவர் தானாக சுவாசிக்கும் அளவுக்கு அவரது நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக அவரது மகனான ஸஃபார் ருஷ்டி (Zafar Rushdie) தெரிவித்துள்ளார்.
வாழ்வையே மாற்றும் அளவுக்கு அவருக்கு பயங்கர காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அவரது நகைச்சுவை உணர்வில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை என்று கூறியுள்ளார் ஸஃபார்.