சிறுநீர் ஒருவித துர்நாற்றத்துடன் வருகிறதா? இதற்கு என்ன காரணம் தெரியுமா?
Food
Digestive disorder
Urine infection
By Kishanthini
பொதுவாக சிறுநீர் வாசனையில் நீங்கள் மாற்றத்தை காண்கிறீர்கள் என்றால் அது ஆபத்துக்கான அறிகுறியாகும்.
சிறுநீரில் ஏற்படும் வலுவான துர்நாற்றம் எப்போதும் பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.
ஆனால் ஒரு சில நேரங்களில் இது மருத்துவ பிரச்சனைகளின் அடையாளமாக இருக்கலாம்.
இதனால் துர்நாற்றம் அதிகமாக உள்ள சிறுநீர் ஏற்படுவதற்கான பொதுவான காரணங்களை பற்றி தெரிந்து கொள்வோம்.
- Urinary Tract Infections என்று சொல்லக் கூடிய சிறுநீரகப் பாதை தொற்று பிரச்சனை இருந்தாலும் சிறுநீர் துர்நாற்றம் வீசலாம். அதாவது தொற்று பாக்டீரியாக்களின் கலப்படமே இந்த துர்நாற்றத்திற்குக் காரணம்
- நீங்கள் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றாலும் உங்கள் சிறுநீர் துர்நாற்றம் வீசும்.
- நீங்கள் அதிகமாக காஃபி அருந்தும் நபர் எனில் உங்கள் சிறுநீர் துர்நாற்றம் வீசலாம். ஏனெனில் காஃபியின் கலவையானது வளர்சிதை மாற்றமடையும் போது, அதன் துணை பொருட்கள் சிறுநீரில் துர்நாற்றத்தை உண்டாக்கும்.
- நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு சிறுநீர் துர்நாற்றம் வீசும். அதாவது நீரிழிவு நோயாளிகளுக்கு சர்க்கரை அளவை சமன் செய்ய முடியாத காரணத்தால் அது சிறுநீர் வழியாக கலந்து வரும்போது துர்நாற்றத்தை ஏற்படுத்தும்.
- Sexually Transmitted Infections எனப்படும் பாலியல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தாலும் சிறுநீர் துர்நாற்றம் வீசும். சில சமயங்களில் இந்த நோய்த்தொற்றுகள் சிறுநீரின் வாசனையை மாற்றக்கூடிய சிறுநீர்க்குழாய் அழற்சியை ஏற்படுத்தும்.
- அஸ்பாரகஸ், பிரஸ்ஸல்ஸ் முளைகள், வெங்காயம், பூண்டு, சால்மன், ஆல்கஹால் மற்றும் கறி ஆகியவை சில உணவுகளை சிலரின் உடலால் முழுமையாக ஜீரணிக்க கடினமாக இருக்கும். இதனால் நாற்றங்களுடன் கூடிய வளர்சிதை மாற்றங்களை விட்டு வெளியேறுகின்றன.
- வெஜினா உட்பட உடலின் பல பாகங்களில் ஈஸ்ட்கள் இயற்கையாகவே உள்ளன. அவை அதிகமாகப் பெருகும் போது, அது உடலில் சிக்கல்களுக்கு வழிவகுக்கும், மேலும் வெஜினாவில் ஈஸ்ட்கள் வளரும். , சிறுநீர்க்குழாய்க்கும் வெஜினாவுக்கும் இடையே இருப்பதால், சிறுநீர் துர்நாற்றம் வீசும்.
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US