BRAவின் பொருள்! சரியான பதில் உங்களுக்கு தெரியுமா?
பெண்களின் முக்கிய உள்ளாடைகளின் ''BRA'' உம் ஒன்று. இது அழகிற்காக மட்டுமல்லாமல் ஆரோக்கியத்திற்கும் உடலுக்கும் அவசியமான ஒன்றாக இருக்கிறது.
8 முதல் 80 வயது வரை அனைவருக்கும் பெண்களின் உள்ளாடையான ''BRA'' தெரியும். ''BRA'' என்பது பிராசியர் -Brassiere என்பதன் குறுகிய வடிவம். ப்ரெஸ்சியா என்பது பிரெஞ்சு வார்த்தையிலிருந்து வந்தது.
இந்த வார்த்தை முதன்முதலில் 1893-ல் ஒரு அமெரிக்க செய்தித்தாளில் பயன்படுத்தப்பட்டது. அதன் பிறகு, இந்த வார்த்தை பல்வேறு இதழ்கள் மற்றும் பிற செய்தித்தாள்களில் பரவலாக பயன்படுத்தப்பட்டது. சில ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த வார்த்தை ஆக்ஸ்போர்டு அகராதியில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
''BRA'' டிசைன்கள் கடந்த காலத்துடன் ஒப்பிடும்போது நிறைய மாறிவிட்டது. ஆரம்பத்தில், ப்ராக்களில் கப் போன்ற வடிவங்களில் இல்லை. இதனால், அக்காலத்தில் பெண்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிட்டது. பின் முதல் கப் வடிவமைப்பை 1930-ல், SH கேம்ப் நிறுவனம் உருவாக்கியது.
பின் காலப்போக்கில் பெண்களின் உள்ளாடைகளின் வடிவமைப்பும் மாறியது. கப் உள்ளது, கப் இல்லாதது, ஸ்ட்ராப் இல்லாதது, ஸ்போர்ட்ஸ் ப்ரா என மாறியது.
நிபுணர்களின் கூற்றுப்படி, சரியான அளவு உள்ளாடைகளைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு, உள்ளாடைகளை தொடர்ந்து பயன்படுத்தக் கூடாது.
ஒரு உள்ளாடை 8 முதல் 9 மாதங்கள் நீடிக்கும். அதன் பின்னர் அதில் தளர்வுகள் ஏற்படும். அதற்கு மேலும் பயணித்தால் மார்பக சேதத்தை ஏற்படுத்தும்