ACயில் குறிப்பிடப்படும் டன் என்ற சொல்லின் அர்த்தம்.., என்ன தெரியுமா?
நாட்டில் கோடை காலம் தொடங்கி, பல்வேறு பகுதிகளிலும் வெயில் மிக அதிகமாக இருக்கிறது.
ஆகையால், பலர் தங்கள் வீடுகளுக்கு ஏசி வாங்க திட்டமிட்டு வருகின்றனர்.
அந்த வகையில், Air conditioner வாங்கும்போது குறிப்பிடப்படும் டன் என்பதை பற்றி இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக, நாம் வசிக்கும் வீட்டின் அளவை பொறுத்தே, 1 டன், 1.5 டன் மற்றும் 2 டன் என்ற அளவில் ஏசியை வாங்குகிறோம்.
ஆனால், ஏசியில் டன் என்பது என்ன என்று கேட்டால், பலருக்கும் பதில் தெரியாது.
ஏசியை பொறுத்தவரை டன் என்பது ஒரு அறையில் இருந்து வெளியேற்றக்கூடிய வெப்பத்தின் அளவைக் குறிக்கக் கூடியது.
ஒரு மணி நேரத்தில் ஒரு அறையில் இருந்து எவ்வளவு வெப்பத்தை ஏசி வெளியேற்றுகிறது என்பதன் அடிப்படையிலேயே டன் கணக்கிடப்படுகிறது.
12,000 BTU 1 டன் என்று அழைக்கப்படுகிறது. BTU என்பது பிரிட்டிஷ் தெர்மல் யூனிட்டைக் குறிக்கிறது. இது ஏசியின் குளிரூட்டும் திறனை அளவிடும் ஒரு அலகு ஆகும்.
1 டன் ஏசி 12,000 BTU, 1.5 டன் ஏசி 18,000 BTU, மற்றும் 2 டன் ஏசி என்பது, 24,000 BTU ஆகும்.
அதாவது, 150 சதுர அடி வரை உள்ள அறையில் 1 டன் ஏசி நன்றாக வேலை செய்யும். மேலும், 200 சதுர அடி அறைக்கு 1.5 டன் ஏசி சரியாக இருக்கும்.
அறையின் அகலத்துடன் கூரையின் உயரம், ஜன்னல் அமைப்பு ஆகியவற்றையும் கணக்கில் கொண்டு, ஏசியை தேர்வு செய்யவேண்டும்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |