ரூ.5 லட்சம் விலையுள்ள உலகின் விலை உயர்ந்த ஐஸ்க்ரீம்.., எது தெரியுமா?
What is the most expensive ice cream in the world?- பொதுவாக ஐஸ்க்ரீம் என்றாலே அனைவருக்கும் விரும்பி உண்ணுவார்கள்.
அந்தவகையில், உலகின் விலை உயர்ந்த ஐஸ்க்ரீம் எது என்பது குறித்து பார்க்கலாம்.
ஜப்பானை சேர்ந்த செல்லாட்டோ நிறுவனம் உலகின் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்க்ரீமை தயாரித்துள்ளது.
பியாகுயா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த ஐஸ்க்ரீமின் விலை ரூ.5.5 லட்சத்துக்கும் அதிகமாகும்.

இந்த ஐஸ்க்ரீமை ரிவி உணவகத்தின் தலைமைச் சமையல்கலைஞர் தடாயோஷி யமடா உருவாக்கியுள்ளார்.
புதுமையான கலவை உணவுகளுக்காக பிரபலமான இவர், சிறப்பு முயற்சியாக இந்த ஐஸ்க்ரீமை தயாரித்துள்ளார்.
இந்த ஐஸ்க்ரீமில் உண்ணக்கூடிய தங்கத் தகடு, வெள்ளை ட்ரஃபிள், பார்மிஜியானோ ரெஜியானோ சீஸ் மற்றும் சகே லீஸ் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.

இதில் பயன்படுத்தப்படும் வெள்ளை ட்ரஃபிள் இத்தாலியின் ஆல்பா பகுதியில் இருந்து பெறப்படுகிறது. இதன் விலை ஒரு கிலோவுக்கு சுமார் ரூ.12 லட்சம் என கூறப்படுகிறது.
விலையுயர்ந்த பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், இந்த ஐஸ்க்ரீமின் விலையும் அதிகமாக உள்ளது. இதன் விலை 873,400 ஜப்பானிய யென், அதாவது சுமார் ரூ.5.5 லட்சம் ஆகும்.
வெள்ளை ட்ரஃபிளின் வலுவான நறுமணத்துடன், பார்மிஜியானோ ரெஜியானோ சீஸின் தனித்துவமான சுவையும் இதில் இருக்கும் என கூறப்படுகிறது.

ஜப்பானிய மற்றும் ஐரோப்பிய மூலப்பொருட்களை இணைத்து இந்த ஐஸ்க்ரீமை உருவாக்கியுள்ளனர்.
சரியான சுவையை உருவாக்க ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாக நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
இந்த முயற்சியின் மூலம் பியாகுயா ஐஸ்க்ரீம் உலகின் மிகவும் விலையுயர்ந்த ஐஸ்க்ரீம் என்ற கின்னஸ் உலக சாதனையையும் பெற்றுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |