பூமியில் உள்ள மிகவும் விஷமுள்ள விலங்கு எது தெரியுமா? மனிதனை வேகமாக கொல்லும்
மனிதனை மிக விரைவாகக் கொல்லும் விஷமுள்ள விலங்கு எது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
விஷமுள்ள விலங்கு (venomous animal)
பொதுவாகவே சில விலங்குகளால் நமக்கு பாதிப்பில்லை என்று கூறினாலும் அதன் வலிமையானது மறைக்கப்படுகின்றன. சில நேரங்களில் நாம் அதனுடன் எதார்த்தமாக இருந்தாலும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
அதனை போன்ற ஆபத்தான விலங்கை தான் பார்க்க போகிறோம், அது தான் பெட்டி ஜெல்லிமீன் (box jellyfish). இந்த விலங்கானது நமது கண்ணுக்கு தெரியாத கடல் விலங்காகும்.
இந்த விலங்கின் தோற்றத்தை பார்த்தால் மென்மையாக தான் உணருவீர்கள். ஆனால், சில நிமிடங்களில் உங்களது உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு மாறிவிடும்.
இந்த பெட்டி ஜெல்லிமீன்கள் சூடான வெப்பமண்டல நீரில் தங்க கூடியவை. முக்கியமாக இது மனிதனை கொல்லும் அளவுக்கு விஷத்தை வெளியிடும் தன்மை கொண்டது.
இவை கியூபோசோவா வகுப்பைச் சேர்ந்தவை. இதன் அகலமானது 30 செ.மீ வரை உள்ளது. இந்த விலங்கில் உள்ள நெமடோசிஸ்ட்கள் எனப்படும் மில்லியன் கணக்கான சிறிய, ஹார்பூன் போன்ற அமைப்புகள் தூண்டப்படும்போது விஷத்தை வெளியிடுகின்றன.
இந்த ஜெல்லிமீன்கள் மிதந்து செல்வது மட்டுமல்லாமல் சுறுசுறுப்பாகவும் இருக்கும். இது 1.5 மீ/வி (சுமார் 4 மைல்) வேகத்தில் வேகமாக நீந்தக்கூடிய சக்தியை கொண்டுள்ளன.
இந்த விஷமுள்ள மீன்களால் அவுஸ்திரேலியாவில் 19 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து குறைந்தது 69 பேர் இறந்ததாக சுற்றுச்சூழல் இலக்கிய கவுன்சில் தெரிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |