இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி.., எது தெரியுமா?
ஆரோக்கியமான வாழ்க்கைக்கு அவசியமான காய்கறிகள் இந்திய உணவுமுறையில் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தியாவின் பல்வேறு காலநிலைகளில் பலவகையான காய்கறிகள் பயிரிடப்படுகின்றன.
அந்தவகையில், இந்தியாவின் தேசிய காய் என்று அழைக்கப்படும் காய்கறி எது என்பது குறித்து பார்க்கலாம்.
அதன்படி, இந்தியாவின் தேசிய காய் என்று பூசணிக்காய் அழைக்கப்படுகிறது.

ஆண்டு முழுவதும் கிடைக்கும் பூசணிக்காய் குறைந்த மழையிலும், வெப்பமான காலநிலையிலும் நன்றாக வளரும்.
இந்த காய் கார உணவுகளிலும், இனிப்பு வகைகளிலும் பயன்படுத்தப்படுகிறது. குழம்பு, சூப், இனிப்பு போன்ற பல உணவுகளில் இது சேர்க்கப்படுகிறது.
பூசணிக்காய் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்கும் என்பதால் விவசாயிகளும், குடும்பங்களும் இதைப் பெரிதும் பயன்படுத்துகின்றனர்.
இதில் வைட்டமின் A, வைட்டமின் C மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இது உடல்நலத்திற்கு மிகவும் பயனுள்ளது.

இது பார்வைத்திறனை மேம்படுத்துதல், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்தல், இதய ஆரோக்கியத்தைப் பாதுகாத்தல் மற்றும் செரிமானத்தை மேம்படுத்துதல் போன்ற முக்கிய ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது.
மேலும், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நாள்பட்ட நோய்களின் அபாயத்தைக் குறைக்கின்றன.
குறிப்பாக, இதில் குறைந்த கலோரி மற்றும் அதிக நார்ச்சத்து இருப்பதால், பசியைக் குறைத்து உடல் எடையைக் குறைக்க உதவுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |